அவிசாவளை – கொஸ்கம, சாலாவ பகுதியில் தனியார் பஸ்சொன்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
எம்பிலிபிட்டியவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸூம் கொழும்பிலிருந்து எம்பிலிபிட்டிய நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று (22) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தோர் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஏனையோர் கொஸ்கம அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.