தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தி மக்களுக்கான நலன்சார் திட்டங்களை நிச்சயம் முன்னெடுப்போம் : EPDP !

 

image

பாரூக் சிகான்

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தி மக்களுக்கான நலன்சார் திட்டங்களை நிச்சயம் முன்னெடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்

கையில், 1977 இல் நடைபெற்ற தேர்தலின் போது இதுதான் கடைசித் தேர்தல் என்றும் அடுத்த தேர்தல் தமிழீழத்தில் தான் என்றும் தமிழ்த் தலைமைகள் கூறின. ஆனால் நடந்தது என்ன?.
ஆனாலும், இன்றுள்ள சூழலை தமிழ் மக்கள் நன்கு விளங்கிக் கொண்டுள்ளபடியால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் சவாலை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி அவர்கள் தற்போது மக்கள் முன் அம்பலப்பட்டுள்ளார்கள் என்பதுடன் கூட்டமைப்பினர் தொடர்பில் மக்கள் உண்மை நிலவரத்தினையும் புரிந்து கொண்டுள்ளார்கள்.

கடந்த காலங்களிலும் கூட்டமைப்பினரின் வெற்றுக் கோசங்களையும் உணர்ச்சிப் பேச்சுக்களையும் நம்பி ஏமாந்தபடியால் தான் மக்கள் உயிரிழப்புக்களையும், பேரவலங்களையும் சந்தித்திருந்தனர்.

அத்துடன் கிடைக்கப் பெற்ற சந்தர்ப்பங்களும் சரியான முறையில் பயன்படுத்தவில்லையென்றும் சுட்டிக்காட்டிய அவர், எமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதைப் போன்று மக்கள் நலன்சார்ந்த விடயங்களையும் செயற்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் செயலாளர் நாயகம் பதிலளித்துள்ளார்.