அட்டாளைச்சேனை தாயின் தாலாட்டில் சிகரம் தொட்ட சிகரங்கள் மகிழ்ச்சி விழா”

 

image

அபு அலா

அட்டாளைச்சேனை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் “அட்டாளைச்சேனை தாயின் தாலாட்டில் சிகரம் தொட்ட சிகரங்கள் மகிழ்ச்சி விழா” நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (19) அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.பி.நூறுல் ஹக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு ஓய்வுபெற்ற சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி யூ.கே.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாகவும் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் ரீ.எல்.அப்துல் மனாப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், எம்.எஸ்.உதுமாலெப்பை கௌரவ அதிதிகளாகவும் விஷேட அதிதிகளாக நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூஸா நக்பர், ஓய்பெற்ற அதிபர்களான எம்.ஏ.உதுமாலெப்பை, யூ.எம்.சஹீட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

“அட்டாளைச்சேனை தாயின் தாலாட்டில் சிகரம் தொட்ட சிகரங்கள் மகிழ்ச்சிப் பெருவிழாவில் அல் ஹாபிழ் பட்டம் பெற்றவர்கள், நீதிபதிகள், இலங்கை நிருவாக சேவை உயர் அதிகாரிகள், டாக்டர்கள், கல்விச் சேவை அதிகாரிகள், சட்டத்தரணிகள், பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் சுமார் 101 போருக்கு பொண்னாடை போர்த்தி ஞாபகச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை தாயின் தாலாட்டில் சிகரம் தொட்ட சிகரங்கள் 101 பேர்களும் அட்டாளைச்சேனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாயலுக்கு அழைக்கப்பட்டு விஷேட துஆப் பிரார்த்தனையுடன் இசை வாத்திய குழுவினரால் பிரதான வீதி வழியாக அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானம் வரை அழைத்து செல்லப்பட்டமையும், அட்டாளைச்சேனையில் இவ்விழா இடம்பெற்றமையும் வரலாற்றில் முதற்தடவையாக இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.