பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் பூமிக்கு அடியில் இரகசிய நீச்சல் குளம் செயற்பட்டுவருவது தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்தவரான அலெக்ஸாண்டர் பிராட்லி என்பவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் குடியேறி வசித்து வருகின்றார்.
இந்நிலையில் இவர் தனது தி சிட்டி ஒப் சீ (City Of Sea) என்ற ஆவணப்படத்திற்காக பாரிஸ் நகரின் சாலைகளுக்கு அடியில் இருக்கும் கால்வாய்கள் மற்றும் சுரங்கபாதைகள் ஆகியவற்றை பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார்.
அப்போது நிலத்துக்கடியில் கடந்த 30 ஆண்டுகளாக இரகசிய நீச்சல் குளம் செயற்பட்டுவருவதை அறிந்துள்ளார். எனவே தனது குழுவுடன் பாரிஸின் சாலைகளுக்கு அடியிலுள்ள அவற்றை ஆராய்வதற்கு முடிவு செய்தார்.
இதன்படி சாலையின் அடியில் கால்வாய் வழியாக சென்றபோது பூமியின் அடியில் ஏராளமான கால்வாய்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் இருப்பதை அறிந்தார்.
மேலும் நிலத்துக்கடியில் சுமார் 5 மீற்றர் அளவுள்ள நீரை, நீச்சல் குளம் போல் உள்ளூர்வாசிகள் சிலர் கடந்த 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.