எதிர் வரும் பொது தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானை சினத்தில் போட்டி இடுவது நாம் அறிந்த விடயமே .
முஸ்லிம் காங்கரஸ் கட்சியின் தலைவர் முஸ்லிம்கள் அதிகம் வாழும் தொகுதிகளான கல்முனை, பொத்துவில் ,மற்றும் சம்மாந்துறை ஆகியவற்றை பிரதான படுத்தி மூன்று ஆசனங்களை பெரும் நோக்குடன் கட்சியின் சார்பில் மூன்று வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்.
ஆனால் மூன்று தொகுதிகளுக்கும் நியமிக்க பட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதேசம் என்பன தொடர்பாக ஏற்பட்டு இருக்கும் எதிர் மறை கருத்துக்கள் மு .கா தலைவர் எந்த நோக்குடன் வேட்பாளர் தெரிவு செய்தாரோ அந்த நிறைவேறாமல் போவதற்கான சந்தர்பத்தை உருவாக்கி உள்ளதாகவே அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதர வாளர்களின் பேசும் பொருளாக மாறி இருப்பதனை அவதானிக்க முடிகிறது .
கல்முனை தொகுதியை பிரதிநிதித்துவ படுத்தி முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் ஹரிசையும் சம்மாந்துறை தொகுதிக்கு மன்சூரையும்,பொத்துவில் தொகுதிக்கு முன்னால் பாராளமன்ற உறுப்பினர் பைசல் ஹாசிமையும் நியமித்தமை அவர்களின் சொந்த ஊர்களில் எதிர்ப்பையும் மாவட்டம் முழுவதும் தலைவரின் முடிவானது அட்டாளைச்சேனை ,அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் மக்களுக்கான ஒரு கழுத்தருப்பாகவும் நோற்க படுகின்றது
சம்மாந்துறை தொகுததி மக்கள் குறிப்பாக சம்மாந்துறை ஊர் மக்கள் மன்சூரை வேட்பாளராக நியமித்தமையை ஏற்றுக்கொள்ளாமை முக்கிய பின்னடைவாகும் .ஏனெனில் அவர்கள் மாஹிரை வேட்பாளராக நியமிப்பதை விரும்பியதுடன் அவர்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது .மன்சூரின் கடந்த கால செயற்பாடுகளை சம்மாந்துறை மக்கள் அங்கிகரிக்காமை அதற்கு பிரதான காரண மாகும்.
கல்முனை தொகுதிக்கு நியமிக்க பட்ட ஹரிசுக்கு சாய்ந்த மருது பிர தேசசபை உருவாக்கத்திக்கு தடையாக இருந்தவர் என்ற கருத்தின் அடிப்படையில் சாய்ந்த மருது மக்கள் அவருக்கு எதிராகவும் அவர் சார்ந்த கட்சிக்கு எதிராகவும் வாக்கு அளிக்க இருப்பதை அவதானிக்க முடிகிறது.மேலும் அவரின் சொந்த ஊரான கல்முனையில் உள்ள அவரின் உள்ளூர் போட்டி யாளர்கள் அவர் தோற்க வேண்டும் என்ற மன நிலையில் இருப்பது மேலும் ஒரு பின்னடை வாகும் .
பொத்துவில் தொகுதி வேட்பாளர் தெரிவு இன்று அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் ஒட்டு மொத்த வெற்றி வாய்ப்பை கோள்விக்கு உட்படுத்தி உள்ளதுடன் கட்சியன் பிர தான எதிரிகளான அதாவுல்லாஹ் மற்றும் ரிசாத் பதுருதீன் ஆகியோரின் கரங்களை அம்பாறை மாவட்டத்தில் பலப்படுத்தவும் உதவி உள்ளதாக சுட்டி காட்ட படுகின்றது
பொத்துவில் தொகுதில் உள்ள பிரதான ஊர்களான அட்டாளைச்சேனை ,அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் ஆகிய பிர தேசங்களின் அரசியல் பிரமுகர்களையும் வாக்காளர்களையும் கருத்தில் கொள்ளாது நிந்தவூரை சேர்ந்த முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் பைசல் ஹாசிம் பொத்துவில் தொகுதி வேட்பாளராக நியமிக்க பட்டமை பெரும் வாத பிரதி வாதங்களை இப்பிர தேச மக்களிடையே தோற்று வித்து இருப்பதுடம் மாகான சபை உறுப்பினர்களான நசிர் மற்றும் தவம் ஆகியோர் அரசியல் செயட்பாடுகளில் ஈடு படு வதக்கான நியாய மான காரணத்தை தெருவிப்பதக்கான சந்தர்பத்தை பரித்துள்ளமையும் முக்கிய விடையமாகும்.
மேலும் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பொத்துவில் மக்கள் தலைவரினால் நியமிக்க பட்ட வேட்பாளர்களுக்கு வாக்கு அளிப்பதன் ஊடாக அடைய போகும் அரசியல் அதிகார ரீதியான நலவுகள் தொடர்பாக பாரிய எதிர்பார்புகளை கொண்டு இருப்பதனாலும் அதற்கு தலைவரின் தெளிவானதும் உறுதியானதுமான நம்பிக்கை ஊட்டும் உறுதி மொழி இதுவரை வழங்க படாமையும் இப்பிராந்திய மக்களின் அரசியல் செயற்பாடுகளில் பாரிய தாகத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயமாகும்.
மேலும் பல தடவை மு.கா தலைவரின் தேசிய பட்டியல் வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டதன் காரணமாக அட்டாளைச்சேனை மக்கள் மீண்டும் ஏமாற தயார் இல்லை என உறுதியான அப்பிர தேச அரசியல் வாதிகளின் கருத்தாகும் .
அதே போன்று அக்கரைப்பறறு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களும் மாகான சபை உறுப்பினர் தவமும் எதிர் வரும் பொது தேர்தலில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது தொடர்பாக தடுமாற்றத்தை எதிர் நோக்கி உள்ளனர். அக்கரைப்பற்றில் 15 வருடங்களாக பாராளமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த அதாவுல்லாஹ்வுக்கு எதிராக வாக்களிக்க சொல்லுவதற்கான சரியான காரணமோ எதிர் கால அரசியல் அதிகாரம் தொடர் பான உறுதி மொழியோ அக்கரைப்பற்று மக்களுக்கும் மாகான சபை உறுப்பினர் தவதிக்கும் வழங்க படவில்லை.
இவ்வாறன சந்தர்பத்தில் அக்கரைப்பற்று மக்களை தவம் அதாவுல்லாஹ்வுக்கு எதிராக திசை திருப்புவது அல்லது வாக்களிக்க வேண்டாம் என கூறுவது எதிர் காலத்தில் அக்கரைப்பற்றின் வரலாறு இருக்கும் வரை தவத்தின் மீது பழியையும் ,வசையையும் பேசிக் கொண்டே இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இது தவத்திற்கு தெரியாதே விடையம் அல்ல என்பதுடன் தவத்தின் அரசியல் செயற்பாடு முழுமையாக செயல் இழந்து அல்லது தீவிரம் அற்ற நிலையை நோக்கி நகரும் என்பது தற்போது அவரின் மௌனத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும்
எனவே மேற்குறிப்பிட்ட விடயங்கள் மு.கா தலைவரின் தேர்தல் வியுகத்தில் ஆதிக்கம் செலுத்தும் பிரதான காரணிகளாக இருப்பதனால் மூன்று வேட்பாளர்களினதும் வெற்றி வாய்ப்பு என்பது ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்ற பழ மொழியாய் ஓத படும் என்பது மட்டுமே உண்மையாகும்.
ஏ. எம் .சுல்பிகார்