முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காஸிம் பெருநாள் வாழ்த்து!

Faizal-MP-2-150x150
அஸ்லம் எஸ்.மௌலானா
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை உடைப்பதற்கு முன்னெடுக்கப்படுகின்ற சூழ்ச்சிகளை முறியடிப்பதற்கு முஸ்லிம்கள் அனைவரும் சகல பேதங்களையும் மறந்து ஒன்றினைவோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசால் காஸிம் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
முஸ்லிம்கள் தமக்குள் ஒற்றுமைப்படாமல் பிரிந்து செயற்படுவதன் காரணமாகவே தேசிய, சர்வதேச மட்டத்தில் நாம் நசுக்கப்பட்டு வருகின்றோம். பல அரபு, முஸ்லிம் நாடுகள் இன்று மேற்குலக சக்திகளின் பிடிக்குள் சிக்குண்டு தவிக்கின்றன. இஸ்லாம் மார்கத்தின் எழுச்சியை தடுப்பதற்காகவும் பாரிய சூழ்ச்சித் திட்டங்களை அந்த சக்திகள் அரங்கேற்றி வருகின்றன.
நமக்குள் எழுகின்ற பிரிவினைகளே சூழ்ச்சிக்காரர்களுக்கு வாய்ப்பாக அமைகின்றன என்பதை உலகில் வாழ்கின்ற அனைத்து முஸ்லிம்களும் பொறுப்புடன் சிந்தித்து உணர வேண்டும்.
இந்த இக்கட்டான அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் என்ற வரையறைக்குள் ஏன் எம்மால் ஒற்றுமைப்பட முடியாதுள்ளது என்று சிந்திக்க வேண்டியுள்ளது. ஆகையினால் இப்பெருநாள் தினத்தில் சமூக ஒற்றுமையையும் எமது அரசியல் பலத்தையும் மேலும் ஸ்திரப்படுத்துவதற்கு அனைத்து வகையான முயற்சிகளையும் முன்னெடுக்க உறுதி பூணுவோம். -ஈத்முபாரக்-