பழுலுல்லாஹ் பர்ஹான்
முஸ்லிம்களின் புனித பெருநாள் தினங்களில் ஒன்றான ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை இன்று உலக முஸ்லிம்கள் கொண்டாடிவருகின்றனர்.
இலங்கையில் சர்வதேச பிறை அடிப்படையில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் குத்பாப் பிரசங்கம் என்பன 17-07-2015 இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு,புத்தளம்,அக்கறைப்பற் று ,காத்தான்குடி, நீர் கொழும்பு ,ஹபுகஸ்தலாவ உட்பட பல பிரதேசங்களில் இடம்பெற்றது.
இதற்கமைவாக காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பு ஏற்பாடு செய்த நபி வழியிலான புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை முன்றலில் நடைபெற்றது.
இங்கு பெருநாள் தொழுகையை மௌலவி அஷ்ஷெ;ய்க் அஸ்பர்(பலாஹி) நடாத்தியதோடு பெருநாள் குத்பாப் பிரசங்கத்தை பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் நிகழ்த்தினார்.
இதில் ஆண் பெண் அடங்கலாக சுமார் 1500க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. ரவூப் தெரிவித்தார்.
சர்வதேசப் பிறை அடிப்படையில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை இலங்கை நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பு ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முஸ்லிம்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று அதன் பின்னர் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.