லண்டன் வாழ் இலங்கை மக்கள் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடினர் !

IMG_1317_Fotor

மீரா அலி ரஜாய்

புனித ரமழான் மாதத்தில் பசித்திருந்தும்,தாகித்திருந்தும் இறைவனின் இந் அருளை வேண்டி ஐம் புலன்களையும் அடக்கியாண்டு அல்லாஹுக்கு தன்னை தியாகம் செய்து கொண்ட முஃமின்கள் யாவரும் இன்று புத்தாடை அணிந்து நறு மணம் கமழ தொழுகை திடலுக்கு சென்று தொழுகை மேற்க் கொண்டு உற்றார், உறவினர் நண்பர்களோடும் மற்றும் அறிமுகம் இல்லாத அன்பர்களோடும் “முசாபஹா” செய்து கொண்டு ஒருவருக்கொருவர் இதய பூர்வமான நல் வாழ்த்துக்களை வெளிபடுத்திக் கொண்டதை உள்ளங்களுக்கெல்லாம் புத்துணர்வை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.

உலகில் பல்வேறு நாடுகளிலும் முஸ்லிம் மக்கள் புனித “ஈதுல் பித்ர்” நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றனர் அதனடிப்டையில்,

IMG_1313_Fotor

லண்டன், Hemel Hempstead நகரில் வாழும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடினர். இதில் மௌலவி எம். ரஹீம் நலீமி அவர்கள் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரசங்கத்தையும் நடத்தினார்.

உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் சாந்தி, சமாதானமாக வாழ வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்றும் அத்துடன் ரோஹிங்கிய மக்கள் கொல்லப்பட்டும் , ஆயிரக்கணக்கான மக்கள் படு காயம் அடைந்தும், பல்லாயிரக் கணக்கான மக்கள் குடி இருப்புகளில் இருந்து இடம் பெயர்ந்து அகதி முகாமில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் . அவர்களுக்காக நாம் எல்லோரும் ஆழ்ந்த கவலையோடு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதோடு,

இன்ஷா அல்லாஹ் அகம் பாவம் பிடித்த அநியாயக்காரர்களின் முடிவு வரலாற்றில் ஃபிர்அவ்னுக்கும் , ஹம்மானுக்கும், காருனுக்கும் ஏற்பற்ற முடிவுகளை விட மோசமானதாக இருக்கும் என்றும் மௌலவி எம். ரஹீம் நலீமி தன்னுடைய குத்பா பிரசங்கத்தில் வலியுறுத்தி பேசினார். இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதனை SLMMA Hemel என்கின்ற அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது, இதனை SLMMA Hemel அமைப்பின் தலைவர் அப்துல் சலாம் இதனை வழிநடத்தினார்.

IMG_1323_FotorIMG_1351_Fotor IMG_1357_Fotor  IMG_1369_Fotor