நிந்தவூர் வெட்டு வாய்க்கால் வீதியின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பம். அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை !

image

 

சுலைமான் றாபி

நிந்தவூர் பிரதேச சபையின் கடந்த ஆட்சியின் கீழ் மும்மொழியப்பட்ட நிந்தவூர் வெட்டு வாய்க்கால் புனரமைப்பு வேலைகள் இன்று (16) ஆரம்பிக்கப்பட்டன.

நகர அபிவிருத்தி மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் கீழ் 9 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் இவ்வீதி புனரமைப்பின் மூலமாக நிந்தவூர் மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.

இதில் வெள்ள நேரங்களில் வெட்டாறு மூலமாக கடலுக்குச்செல்லும் நீர் இங்கு காணப்படும் மத்திய வடிகானின் மூலமாக ஊரிற்குச் செல்வதினால் அதிகமான வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டு இதன் மூலம் சுமார் 4,000 ற்கும் அதிகமான பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் புனரமைப்பு செய்யப்படவுள்ள இந்த வீதியானது செம்மையாகக் காணப்படாமையினால் இந்தப் பிரதேசத்தில் காணப்படும் காணிகளும் மண்ணரிப்பிற்கு உள்ளாவதோடு, அந்தக் காணிகளின் எல்லைகளையும் அடையாளம் காண முடியாமல் போவதாக காணிச்சொந்தக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் சம்பந்தமாக கடந்த பிரதேச சபையின் ஆட்சிக் காலத்தில் மும்மொழியப்பட்ட இந்தக் கோரிக்கைக்கு அமைவாக நகர அபிவிருத்தி மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு உரிய நடவடிக்கை எடுத்தமையினால் இதன் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்க படுவதையிட்டு பொது மக்கள் அமைச்சர் ரஊப் ஹக்கீமிற்கும், கடந்த பிரதேச சபையின் ஆட்சிக் காலத்திற்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றனர்.

image