முன்னாள் MP ஹரீஸ் மஸ்ஜிதுல் குபா பள்ளிவாசலை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலிடம் கையளித்தார் !

1_Fotor

-எம்.வை.அமீர்-

முன்னாள் பாரளமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களில் எண்ணத்தில் உருவான ‘திதுலன கல்முனை’ எனும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அடிக்கல் நடப்பட்டு அரச நிதியான  சுமார் 36லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும் 650000 ரூபாய் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் சொந்த நிதி உதவியுடனும் கட்டி முடிக்கப்பட்ட சாய்ந்தமருது மஸ்ஜிதுல் குபா பள்ளிவாசல் 2015-07-16 ம் திகதி சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலுடாக மக்களிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த பள்ளிவாசலின் திறப்பை ஹரீசிடமிருந்து பெற்றுக்கொண்ட சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனீபா, மஸ்ஜிதுல் குபா பள்ளிவாசலை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் கீழ் புதிதாக 16 வது முஅல்லாவாக பிரகடனப்படுத்தினார்.

2_Fotor

இப்தார் நிகழ்வுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பள்ளிவாசலை ஜும்மா பள்ளிவாசலுடாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதிமுதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.ஏ.பஸீர், மற்றும் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் ஏ.நஸார்டீன் மற்றும் அமீர் ஆகியோரும் ஜும்மா பள்ளிவாசலின் சார்பில் தலைவர் வை.எம்.ஹனீபா, செயலாளர் றோசான் பள்ளிவாசல் உயர் சபை உறுப்பினர்களான சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரீப் மற்றும் ஏ.எல்.ஏ.சலீம் (வர்த்தக சங்கத் தலைவர்) ஆகியோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளரும் நகரஅபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள ஒனாளி ஹோல்டிங் நிறுவனத்தின் பணிப்பாளருமான ஏ.சீ.யஹ்யாகான் அவர்களும் சாய்ந்தமருது பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரி ஏ.எல்.ஏ.மஜீத் ஆகியோரும் பெருந்திரளான முகல்லாவாசிகளும் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

4_Fotor

நிகழ்வில் பிரதான மார்க்க சொற்பொழிவை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் பேஷ் இமாம் மௌலவி எம்.ஐ.ஆதம்பாவா றசாதி ஆற்றினார்.

5_Fotor