ஈரான் மற்றும் மேற்குலக நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளின் பிரகாரம் உலக சந்தையில் எரிபொருட்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படலாம் என கொள்கை திட்டமிடல் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கின்றார்.
இதன் காரணமாக அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கையிலும் எரிபொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு இயலும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக பிரதியமைச்சர் குறிப்பிடுகின்றார்.
ஈரானின் அணுத்திட்டம் தொடர்பில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கை இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து நியூஸ்பெஸ்ட் வினவியதற்கு பதிலளித்தபோதே பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா இந்த விடயங்களைக் கூறினார்.
குறிப்பாக 2016 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் எரிபொருட்களின் விலை 30 வீதத்தால் குறைவடையும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.