அனுதாபத்தை திரட்ட புதிய யுக்தி! ஹூனைஸின் மன உளைச்சல் ஓயவில்லை!

Unknown

முகம்மட் அஸ்பர் 
வன்னி மாவட்ட முன்னாள் எம்பியும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான ஹூனைஸ் பாறுக்கின் மன உளைச்சல் இன்னும் ஓய்ந்ததாக தெரியவில்லை.
வன்னியில் தனக்கு மக்கள் செல்வாக்கு கிஞ்சித்தும் கிடையாது என்பதை உணர்ந்திருக்கும் ஹூனைஸ், அதனை மூடி மறைக்கும் பொருட்டு வீண்பழிகளை சுமத்தி அநுதாபம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஐதேகவின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளராக இருக்கும் அவருக்கு – அவரது கட்சி வேட்பாளர் நியமனம் வழங்காததை மறைக்க – ரிசாத் தான் தனக்கு வேட்பு மனு கிடைக்காததற்கு காரணம் என்ற பொய்க் குற்றச்சாட்டை சுமத்துவதே அவர் தற்போது கண்டுபிடித்துள்ள புதிய அநுதாப யுக்தியாகும்.
ஐதேகவில் இரண்டு ஆசனம் தர வேண்டும் என்றும் மகிந்த அணியினரை சந்தித்து இரண்டு ஆசனம் கோரியும் பின்னர் மைத்திரி அணியை சந்தித்து இரண்டு ஆசனம் கோரி தனது மன உளைச்சலின ;உச்சத்திற்கே சென்ற ஹூனைஸ் தற்போது ஹக்கீமை சந்தித்து தனது மன உளைச்சலை முடித்துக் கொள்ள முயன்றுள்ளார்.
வன்னி மாவட்;டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனியாக கேட்க வேண்டும் என்றும் அவ்வாறு கேட்கும் பட்சத்தில் வவுனியாவைச் சேர்ந்த மஸ்தானின் உதவியோடு வன்னி முஸ்லிம்கள் மத்தியில் உள்ள ஒற்றுமையை குலைத்து ரிசாதை தோற்கடிப்பதுடன் மட்டுமன்றி முஸ்லிம் பிரதிநித்துவத்தையும் இல்லாதொழிப்பதற்கும் முடியும் என்றும் அவர் ஹக்கீமிடம் விபரித்துள்ளார்.
ரிசாதை தோற்கடிக்க வேண்டும், நாடுபூராகவும் முஸ்லிம்கள் மத்தியில் ரிசாதுக்கு இருக்கும் செல்வாக்கை உடைத்து எறிய வேண்டும் என்ற தருணம் பார்த்திருக்கும் முகா தலைவர் ஹக்கீம் – ஹூனைஸின் இந்த சதி ஆலோசனையை சிறுபிள்ளைத்தனமாக ஏற்று இன்று வன்னியில் தனித்து களமிறங்க தீர்மானித்துள்ளார்.
ஏற்கனவே நாம் கூறியது போன்று ஐதேகவில் போட்டியிட ஹூனைஸூக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று கூறுவதற்கு ரிசாத் ஒன்றும் ஐதேக கட்சியைச் சார்ந்தவரும் அல்ல அதன் உறுப்பினரும் அல்ல.
ரிசாத் பதியுதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்னும் கட்சியின் தலைவராக இருக்கும் பொழுது எவ்வாறு அவரால் மற்றுமொரு கட்சியைச் சேர்ந்தவருக்கு போட்டியிட அனுமதி வழங்க வேண்டாம் என கூற முடியும் என்ற நியாயமான கேள்வி இன்று வன்னி மக்கள் மத்தியில் மட்டுமன்றி அனைத்து தரப்பினராலும் எழுப்பப்பட்டுவருகின்றது.
ஹூனைஸூக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதனால் தான் அவரது கட்சி அவருக்கு போட்டியிட அனுமதி மறுத்துள்ளது. அதனை மூடிமறைக்கும் அநுதாபத்தை தான் இப்போது ஹூனைஸ் அரங்கேற்றி வருவதுடன் சுயேற்சையாக போட்டியிடப் போவததாகவும் கூறிவருகின்றார்.
இந்த விடயத்தில் வன்னி மாவட்ட முஸ்லிம்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய அவசியம் நாடுபூராகவும் உள்ள உலமாக்களாலும் கல்விமான்களாலும் பொதுநல அமைப்புக்களாலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், வன்னியில் முகா தனியாக போட்டியிடுவதன் பின்னணியில் ஹூனைஸின் துணையோடு ரவூப் ஹக்கீம் மட்டுமன்றி ஏலவே ஹூனைஸின் இனவாத நண்பர்கள் கூட்டமான சக்தி மிக்க ஊட நிறுவனங்களும் அதை மிஞ்சிய மகி;ந்த தரப்பும் இருப்பதுவும் இந்த வேளையில் வெளிப்படையாக கண்டறியக் கூடிய உண்மையாக உள்ளது.
வன்னி மாவட்டத்தில் மீண்டும் குறைந்தது இரண்டு முஸ்லிம் பிரதிநித்துவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அப்பகுதி முஸ்லிம்களுக்கு இருக்கும் தாகத்துடன் இணைந்து மற்றுமொரு இனத்தைச் சேர்ந்தவரையும் ரிசாதின் நாடாளுமன்ற பயணத்துடன் இணைத்து விட வேண்டும் என்று ஏனைய சமுகத்தினரும் வன்னியில் சிந்தித்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் தான் ஹூனைஸ் -ஹக்கீம் போன்றோரின் இந்த திட்டமிட்ட சதி நடவடிக்கைகள் வன்னியில் அரங்கேறி வருகின்றன.
எனவே வன்னி மாவட்ட முஸ்லிம்களே, ஏனைய சமுகத்தனரே இவ்வாறான இனவாதம் கொண்ட சதிக் கும்பல்களின் பசப்பு வார்த்தைகளுக்கு அடிபணியாது கடந்த 15 வருடங்களாக கட்டிக் காத்து வரும் ஒற்றுமை என்னும் பலத்தை தக்க வைத்துக் கொள்வீர்களாயின் கடந்த 15 வருடத்தில் ரிசாத் பதியுதீன் மூலம் வன்னி மாவட்டம் கண்ட அபிவிருத்தி புரட்சியை மேலும் மேலோங்கச் செய்யலாம்
சிந்தியுங்கள் வாக்களியுங்கள்