சம்மாந்துறையின் தற்போதைய அரசியல் கள நிலவரம்!

 

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

 

சம்மாந்துறையில் பலரும் தேர்தல் கேட்க ஆசை கொண்டதன் காரணமாக யார்? எக் கட்சியில் தேர்தல் கேட்பார்கள் என்ற விடயம் சற்று குழப்பமான நிலையிலேயே காணப்பட்டது.

சம்மாந்துறையின் தற்போதைய கள நிலவரங்களின் படி ஐ.தே.கவானது நேரடியாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களிற்கு எது வித ஆசனத்தினையும் ஒதுக்காததன் காரணமாக கலைக்கப்பட்ட பிரதேச சபையின் தவிசாளர் நௌசாத்,சம்மாந்துறை ஐ.தே.கவின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளர் ஹசன் அலி ஆகியோர் இம்முறை தேர்தல் கேட்க மாட்டார்கள் என அறிய முடிகிறது.

மு.கா சார்பாக கிழக்கு மாகாண அமைச்சர் மன்சூரா? மாஹிரா? என்ற பிரச்சினை மிகவும் உக்கிரம் அடைந்து சென்று கொண்டிருக்கின்றது.மாஹிர் அணியினர் சம்மாந்துறை மு.காவின் போராளிகளினை தன் பக்கம் திருப்ப பல முயற்சிகளில் ஈடு பட்டு வருகின்றனர்.இருப்பினும் மு.கா உள் வட்டாரத் தகவல்களின் படி மு.கா தலைமை கிழக்கு மாகாண அமைச்சர் மன்சூர் அவர்களினை தேர்தலில் களமிறக்கவே  அதிக சாத்தியக் கூறுகள் உள்ளதாக குறிப்பிடுகின்றன.

நிலவரங்கள் இப்படிப் போனாலும் முன்னாள் தென் கிழக்கு பலகலைக் கழக உப வேந்தர் இஸ்மாயில் அவர்கள் அ.இ.ம.கா சார்பாக இம் முறை தேர்தலில் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.தான் சம்மாந்துறை சார்பாக தேர்தல் கேட்பேன் எனக் கூறி வந்த CIMS பல்கலைக் கழக பணிப்பாளர் அன்வர் முஸ்தபா அ.இ.ம.கா சார்பாக களமிறங்க மாட்டார் என்பதும் உறுதியாகயுள்ளது.முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் முஸ்தபா லோயர் தனக்கு முஸ்லிம் காங்கிரஸில் ஆசனம் கிடைக்காத போது அ.இ.ம.கா பக்கம் மாறுவேன் எனக் உறுதியளித்துள்ளதாகவும் (மு.காவில் முஸ்தபா லோயருக்கு ஆசனம் வழங்கப்பட மாட்டாது என்பது உறுதியானது) மாகாண சபை உறுப்பினர் அமீர் டீ.ஏ அ.இ.ம.கா பக்கம் மாறுவதற்கான பேச்சு வார்த்தையில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.இவர்கள் இருவரும் இன்று நடைபெறும் அ.இ.ம.காவின் உயர் பீட கூட்டத்தில் கூட்டத்தில் இணையலாம் என்றும் நம்பப்படுகிறது.

தே.கா சார்பாக கலைக்கப்பட்ட சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர் சிப்லி களமிறங்குவார் என்று நம்பப்படுகிறது.