அம்­பாந்­தோட்டையில் 3 ராஜ­பக்ஷக்கள்; கம்­பஹாவில் 3 ரண­துங்­கக்கள் போட்டி…!

 

srilanka01_Fotor-239x300பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் ராஜ­பக் ஷ குடும்­பத்தை சேர்ந்த மூவர் போட்­டி­யி­ட­வுள்­ளனர். அதே­போன்று கம்­பஹா மாவட்­டத்தில் மூன்று ரண­துங்­கக­்கள் எதிர்­வரும் தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்­ளமை விசேட அம்­ச­மாகும். அந்­த­வ­கையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ராஜ­பக் ஷ எதிர்­வரும் தேர்­தலில் குரு­ணாகல் மாவட்­டத்தில் போட்­டி­யிட்­ட­போ­திலும் அவரின் சகோ­த­ரர்கள் மூவர் அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் போட்­டி­யி­ட­வுள்­ளனர்.

மஹிந்த ராஜ­பக் ஷவின் சகோ­த­ரரும் முன்னாள் சபா­நா­ய­க­ரு­மான சமல் ராஜ­பக்ஷ, மஹிந்த ராஜ­பக் ஷவின் புதல்வர் நாமல் ராஜ­பக் ஷ, மஹிந்த ராஜ­பக் ஷவின் சகோ­தரி நிரு­பமா ராஜ­பக் ஷ ஆகியோர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் ஊடாக அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­கின்­றனர்.

நாமல் ராஜ­பக் ஷவும் நிரு­பமா ராஜ­பக் ஷவும் நேற்று முன்­தினம் வேட்­பு­மனு பட்­டி­யலில் கைச்­சாத்­திட்­டனர். அத்­துடன் சமல் ராஜ­பக் ஷ நேற்­றைய தினம் வேட்­பு­ம­னுவில் கைச்­சாத்­தி­டு­வ­தற்கு ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. இதே­வேளை கம்­பஹா மாவட்­டத்தில் ரண­துங்க குடும்­பத்தைச் சேர்ந்த மூவர் எதிர்­வரும் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்­பாக போட்­டி­யி­டு­கின்­றனர்.
அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க மற்றும் அவ­ரது சகோ­தரர் ருவன் ரண­துங்க, அர்­ஜு­னவின் சகோ­த­ரரும் மேல்­மா­காண முத­ல­மைச்­ச­ரு­மான பிர­சன்ன ரண­துங்க ஆகியோர் கம்­பஹா மாவட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்­பாக போட்­டி­யி­டு­கின்­றனர்.

அர்­ஜுன ரண­துங்­கவும் ருவன் ரண­துங்­கவும் நேற்று முன்­தினம் வேட்­பு­ம­னுக்­களில் கைச்­சாத்­திட்­டு­ள்­ளனர். எனினும் பிர­சன்ன ரண­துங்­க­விற்கு கம்­பஹா மாவட்­டத்தில் வேட்­பு­மனு வழங்­கு­வ­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.