மஹிந்­தவை மட்டும் அல்ல மைத்­திரி அர­சாங்­கத்­தையும் வீழ்த்­து­வதே எமது இலக்­காகும் – ஜே .வி.பி.

Tilvin Silvaஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­மீது மக்கள் வைத்­தி­ருந்த நம்­பிக்­கையை அவர் பொய்­யாக்­கி­விட்டார். மஹிந்­தவை மீண்டும் கட்­சிக்குள் இணைத்துக் கொண்டு மைத்­தி­ரியின் உண்மை முகத்தை வெளிப்­ப­டுத்­தி­விட்டார் என மக்கள் விடு­தலை முன்­னணி குற்றம் சுமத்­தி­யது. மஹிந்­தவை மட்டும் அல்ல மைத்­திரி அர­சாங்­கத்­தையும் வீழ்த்­து­வதே எமது இலக்­காகும் எனவும் ஜே.வி.பி குறிப்­பிட்­டது.

 

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் முன்னாள் ஜன­ாதி­பதி மஹிந்­த­வுக்கு இடம் வழங்­கப்­ப­ட்டி­ருப்­பது தொடர்பில் வின­வி­ய­போதே மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

இந்த நாட்டு மக்­களின் எதிர்­பார்ப்­புகள், மக்­களின் அர்ப்­ப­ணிப்பு அனைத்­தையும் சிதை­வ­டையச் செய்யும் வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன செயற்­பட்­டுள்ளார். கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது நாட்டில் மூவின மக்­களும் மைத்­தி­ரியை ஆத­ரித்­த­மையும் அவரை வெற்­றி­பெறச் செய்­ததன் நோக்­கத்­தையும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மறந்து விட்டார். கடந்த பத்து ஆண்­டு­களில் இந்த நாட்டில் மிகவும் மோச­மான அடக்­கு­முறை ஆட்­சியே நடை­பெற்­றது. இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பின் உச்­ச­கட்ட அரா­ஜ­கத்தை மஹிந்த அர­சாங்கம் கையாண்­டு­வந்­தது.

பொரு­ளா­தார ரீதி­யிலும் அபி­வி­ருத்தி செயற்­பா­டு­க­ளிலும் முழு­மை­யான ஊழல் செயற்­பா­டு­களை தான் மஹிந்­தவின் குடும்ப அர­சாங்கம் மேற்­கொண்­டது. இந்த நிலையில் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் இருந்து மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளி­யேறி ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­ய­வுடன் இந்த நாட்டில் அனைத்து மக்­களும் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் கைகோர்த்தனர். இந்த நாட்டில் ஜன­நா­யகம் தலை­தூக்கும் என்ற நம்­பிக்­கையில் மைத்தி­ரியை ஆத­ரித்­தனர்.

எனினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீதான முழு­மை­யான நம்­பிக்­கையில் மக்கள் செயற்­பட வேண்டாம் என நாம் ஆரம்­பத்தில் இருந்தே தெரி­வித்­தி­ருந்தோம். சுய­நல அர­சி­ய­லுக்­காக இவர்கள் மக்­களின் நம்­பிக்­கையை தகர்த்­தெ­றி­வார்கள் என எச்­ச­ரித்­தி­ருந்தோம். நாம் தெரி­வித்­த­தைப்போல் இன்று நடந்­துள்­ளது.

மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது கட்­சியை காப்­பாற்­ற­வேண்டும் என்­ப­தற்­காக மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை மீறி­விட்டார். இத்­தனை காலமும் மஹிந்த ராஜபக் ஷ மோச­மான தலைவர் என விமர்­சித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீண்டும் கட்­சியில் அவரை இணைத்­துக்­கொண்­டுள்ளார். இதன் பின்­னணி என்­ன­வென்­பது எமக்குத் தெரி­யாது. ஆனால் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­ணியின் தலைவர் என்ற வகையில் அவரால் சுயாதீ­ன­மாக ஒரு தீர்­மா­னத்தை கூட எடுக்க முடி­யா­துள்­ளது. இந்த தலை­மைத்­துவம் எவ்­வாறு நாட்டை சரி­யான பாதையில் கொண்­டு­செல்ல முடியும்.

எனவே தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனை­வ­ரி­னதும் வாக்­கு­களை பெற்று ஜனா­தி­ப­தி­யான மைத்­தி­ரி­பால சிறி­சேன அவ­ரது உண்மை முகத்தை வெளிப்­ப­டுத்தி விட்டார். மஹிந்த ராஜபக் ஷவுக்கு மீண்டும் ஆட்­சியைக் கொடுத்து பழைய அர­சியல் கலா­சா­ரத்தை உரு­வாக்­கவே இவர்கள் முயற்­சிக்­கின்­றனர். இதற்கு மக்கள் இட­ம­ளிக்கக் கூடாது. இந்த நாட்டில் ஏற்­பட்ட ஜன­நா­யக மாற்­றத்தை மீண்டும் சர்­வா­தி­கா­ரி­களின் கைகளில் கொடுக்க மக்கள் ஒரு­போதும் இட­ம­ளிக்கக் கூடாது.

அதேபோல் இம்­முறை பொதுத் தேர்­தலில் மஹிந்­தவின் மோச­டி­களை மட்டும் அல்ல ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பொய் வாக்குறுதிகளை பற்றியும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். இவர்கள் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு செய்யும் ஏமாற்று வேலைகளையும், பொய்களையும் நாம் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி மாற்றம் ஒன்றை கொண்டு வருவோம். மஹிந்தவை மட்டும் அல்ல மைத்திரி அரசாங்கத்தையும் வீழ்த்துவதே எமது இலக்காகும் என அவர் குறிப்பிட்டார்.