இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று 11ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறிவர்தன, பதிரண என்ற இரண்டு புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
29 வயதாகும் சிறிவர்தன உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் 19 முதல்தர போட்டிகளில் 1144 ஓட்டங்களைக் (சராசரி 67.29) குவித்துள்ளார்.
பதிரண லிஸ்ட் ஏ போட்டிகளில் 86 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றிருந்த ரங்கன ஹேரத், கௌஷால், நுவான் குலசேகர, தம்மிக பிரசாத் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.