ஊடக ஒழுங்­கு­முறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்­துள்­ளது!

 

imagesஊடக ஒழுங்­கு­முறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்­துள்­ள­மைக்கு சர்­வ­தேச ஊடக சுதந்­தி­ரத்­திற்­கான குழு கவலை வெளி­யிட்­டுள்­ளது.
ஊட­க­வி­ய­லா­ளர்­களை சட்­டத்தில் தண்­டிக்­கவோஇ அவர்­க­ளுக்கு அப­ராதம் விதிக்­கவோ அதி­காரம் வழங்கும் ஊடக ஒழுங்­கு­முறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்­துள்­ளது.

இலங்­கையில் மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த போது அமுலில் இருந்த ஊடக ஒழுங்­கு­முறைக் குழுவை கடந்த ஜன­வரி மாதம் பத­வி­யேற்ற ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நீக்­கினார்.

மேலும் ஊடகங்­களின் மீதான கட்­டுப்­பா­டு­க­ளையும் கலைத்து உத்­த­ர­விட்டார். இந்­நி­லையில் ஊடக ஒழுங்­கு­முறைக் குழுவை மீண்டும் அமைத்து இலங்கை ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள்ளார்.

எதிர்­வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி பாரா­ளு­மன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில்இ இது போன்ற நட­வ­டிக்கை இலங்கை அரசு எடுத்திருப்பது சர்வதேச ஊடகவியலாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.