அஸ்ரப் .ஏ. சமத்
இன்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ள கட்புல கலை நாட்டிய சங்கீத பீடத்தின் புதிய கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. அதில் கடந்த 10 வருடங்களாக தமிழ் சிங்கள மாணவர்களுக்கு தென்இந்திய இசை,சங்கீத நாட்டிய விரிவுரையளராகக் கடமையாற்றும் கலாநிதி அருந்ததி சிறி ரங்கநாதன் அவர்களின் பெயரில் மண்டபம் ஒனறு திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர். பேராசிரியர் ஆரியரத்தின களுஆராச்சி, பீடாதிபதி சரத் குமார லியனவத்தை மற்றும் மீள்குடியேற்ற இந்துகாலச்சார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், இந்திய உயர் ஸ்தானிகர் ஆலயத்தின் முதற் செயலாளர் ஸ்சா சிறிவஸ்டவா, இலங்கை ருபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் தலைவர் சோமரத்தின திசாநாயக்கவும் கலந்து கொண்டு இம் மண்டபத்தை திறந்து வைத்தனர்.