வை.எம்.பைரூஸ்
எமது நாடு பல்லின மக்கள் ஒன்றினைந்து பௌதர்களை பெரும் பான்மையாக கொண்ட ஒரு நாடு ஆசிய கண்டத்திலயே பல இயற்கை வளங்களைுயும் அழகுகளையும் கொண்டு இந்து சமுத்திரத்தின் முத்து என்று அழைக்கப்படும் ஓர் அழகிய நாடு அதில் நாம் வாழ்வதே எமக்கு பெருமைதான்
அதில் சனத் தொகை அடிப்படையில் மூன்றாம் சாராராக வாழ்பவரே
நாம் ஆனால் இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனி இடம் இருப்பதை நாம் அறிவோம் அதிலும் குறிப்பாக உலக வரலாற்றில் அரசாங்கத்துக்கே கடனுதவி புரிந்த மிகப் பெரும் செல்வந்தராக வாழ்ந்து மரணித்த நளீம் ஹாஜீ போன்ற செல்வ சீமான்களும் சித்தி லெப்பை போன்ற மா பெரும் கல்வி மான்களும் மர்ஹூம் அஷ்ரப் போன்ற அரசியல்மேதைகளும் எமது நாட்டிலேதான் வாழ்ந்து மரணித்து இருக்கின்றார்கள் என்பதை நாம் அறிவோம்
இலங்கை வரலாற்றில் முஸ்லிம்ளை தனித்துவப்படுத்தி காட்ட வென்று 1981க்கு முற்பட்ட காலத்தில் ஒரு கட்சி இருக்க வில்லை ஆனால் மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் விடா முயற்சியினாலும் பல போராளிகளின் வியர்வைகளினாலும் பல தாய் மார்களின் கண்ணிராலும் ஷீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி முஸ்லிம்களுக்குனெ்று ஒரு தனித்துவத்தை எடுத்துக்காட்ட எமது இலங்கை திரு நாட்டில் கிழக்கு மாகாணத்தில் முதல் முதலாக 1981ம் ஆரம்பிக்கப்பட்டு 1986ம் ஆண்டு அரசியல் கட்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது
1981இன் பிற்பாடு உருவாக்கப்பட்ட ஷீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி ஓரிரு வருடங்களிலயே பாரிய வளர்ச்சியையும் பெரும் பான்மை சமூகத்துக்கு பாரிய சவாலாகவும் அமைந்ததை நாம் அறிவோம் அதன் உருவாக்கத்தின் தலைவர் அஷ்ரப் அவர்களின் அளப் பெரும் முயற்சியினால் நாடு முழுவதும் கட்சியின் உறுப்பினர்களை அமைத்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு மட்டு மன்றி மாற்று மத சகோதர சகோதரிகளுக்கும் பல்வேறு அளப்பெறிய சேவைகளையும் பல் வேரு தொழில் வாய்ப்புக்களையும் கொடுத்து சமூகத்துக்காக அங்காங்கே பல வரலாறு காணாத அபிவிருத்திகளை செய்து மக்களுக்காக உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் குரள் கொடுத்தார் அதன் காரணமாகவே அவர் இன்று வரை மக்களின் மனதில் நீங்கதா இடம் பிடித்து வருகிறார் என்பதை நாம் அறிவோம்
சுமார் பதினான்கு வருட காலம் இனம் மத மொழிக்கு அப்பாட்பட்டு முழு மக்களின் நலனுக்காகவும் பாடு பட்ட மா பெரும் தலைவர் அஷ்ரபின் வளர்ச்சியும் அவரின் சேவையையும் பிடிக்காததன் காரணமாக அவரின் சகாக்களே காலப் போக்கில் அவருக்கு எதிரியாக மாறினார்கள் இருந்தும் அவர் மனம் தளர்ந்து விட வில்லை முழு மூச்சாக நின்று முஸ்லிம்களுக்கு குரள் கொடுத்தே வந்தார் அதான் காரணமாக அன்றைய கால அரசாங்கமே இவரைப் பார்த்து நடு நடுங்கியிருந்தது இவ்வாறானே ஒரு காலப் போக்கில்தான் அவரது மரணமும் அவரை வந்தடைந்தது 2000ம் ஆண்டு செப்டம்பர் 16ம் திகதி ஒரு நிகழ்வில் கழந்து கொள்வதற்க்காக அவசர அவசரமாக விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது திடீர் விபத்தோ அல்லது திட்ட மிட்டோ விமானம் வெடித்து தனது ஐம்பதியொராவது வயதில் அகால மரணமாகிறார் இன்னா லில்லாஹி வயின்னா இலைஹீ ராஜீஊன் ஆனால் இன்று வரை அவரின் மரணம் திட்ட மிட்ட கொலையா அல்லது திடீர் விபத்தா என்று தெறயாத புதிராகவே மறைந்து விட்டது
அதன் பிறகு தான் முஸ்லிம்களுக்குள் மிகப் பெரும் அரசியல் சீர் கேடு ஆரம்பம் ஆகிறது அதுதான் அடுத்த தலைமத்துவத்தை யார் பெற்றுக் கொள்வதில் உள்ள சிக்கல் ஆனால் அதை மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களே எனக்குப் பிறகு இந்த கட்சியை வழி நடத்திச் செல்வதற்க்கு தகுதியானவர் ரவூப் ஹக்கீம் என்று சொன்ன ஒரே காரணத்தினால் சிலர் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டாலும் சிலரின் மனம் அதை புறக்கணித்த வண்ணம் ஏதோ ஒன்றும் எம்மால் செய்ய முடியாது என்ற காரணத்தால் ஏனோ தானோவென்று ஏற்றுக் கொண்டார்கள்
அன்று ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைவர் பதவியை எடுத்ததிலிருந்து யார் யார் விமர்சனம் செய்தார்களோ அவர்கள் இன்று வரை விமர்சனம் செய்து கொண்டு தலைமைப்பதவியிலிருந்து அவரை நீக்குவதற்க்கா சில தொண்டர்களை வைத்துக் கொண்டு அரசியலில் சீர் கேடு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் அல்லாஹ்வின் உதவியுடன் அவர் மனம் தளர்ந்து தடம் புரன்டு விடாமல் இன்று வரை சர்வதேச ரீதியில் ஒரு தேசிய கட்சியாக கொண்டு செல்கிறார் என்றால் அது அல்லாஹ்வின் உதவியும் அவரின் மனோ பக்குவமும் திறமையுமே காரணம் என்று கூறிக் கொள்வதில் மிகையாகாது..
அதன் பிற்பாடு நடைபெற்ற மாகாண சபை பாராளு மன்ற தேர்தள்களில் இலங்கையில் நாளா பக்கமும் காங்கிரஸினூடாக தேர்தலில் நின்று வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள் எல்லாம் இன்று ஆளுக்கு ஒரு கட்சியை ஆரம்பித்துக் கொண்டு காங்கிரஸையே எதிர்த்து நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை ஆனால் இவர்கள் எதற்காக இக்கட்சிகளை ஆரம்பித்தார்கள் வயிற்று புளப்பு நடத்துவதற்க்காகவா…? அல்லது மக்களிடத்தில் பிரபல்யத்தை எதிர்பார்த்தா ? அல்லது உண்மையில் சேவை செய்வதற்க்குத் தானா …? அல்லது அரசியலில் சீர் கேடுகளை உண்டு பண்ணவா என்று உண்மையில் குழப்பமாகவே உள்ளது….?
இன்று எமது நாட்டில் வாழும் அண்ணிய மதத்தவர்கள் கூட முஸ்லிம்களை பற்றி தப்பபிப்பிராயம் கொண்டு இருப்பதற்கு முக்கிய காரணமே இந்த அரசியல் வாதிகள் தொண்டனை வைத்து பிற கட்சிக் காரனை தாக்குவதும் அவனுடைய சொத்துக்களை சூரையாடுவதும் பிற கட்சித் தலைவனை இழிவு படுத்துவதற்க்காக அவனை முக நூலிலும் இணையத்தளங்களிலும் வசை பாடித்திரிவதுமே என்றாலும் மிகையாகாது
இன்று கட்சித் தலைவன் சொன்னால் தனது உயிரையே விடுவோம் என்று சொல்லிக் கொண்டு சிலர் முக நூல்களில் வலம் வந்து அரசியல் சீர்கேடுகளை உண்டு பண்ணிக் கொண்டு பிர மதத்தவர்களிடத்திலும் முஸ்லிம்கள் பற்றி தப் அபிப்பிராயத்தை உண்டு பண்ணிக் கொண்டு தானும் நாசமாகிக் கொண்டு போவதை முகநூலிலும் கண் கூடாகவும் எம்மால் காணக் கிடைக்கின்றது ஆனால் இது வெல்லாம் இவர்கள் மார்க்கத்தை சரியாக விளங்கிக் கொள்ளாததன் விளைவே என்பதையும் எம்மால் அறிய முடிகிறது
கடைசியாக ஒன்றைக் கூறிக் கொள்கிறேன் நாம் இவ்வாறு பிளவு பட்டு ஊருக்கொரு கட்சி வைத்துக் கொள்வதால் இழப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கோ அல்லது பிற மதத்தவர்களுக்கோ அல்ல அது ஒற்று மொத்த முஸ்லிம் சமூகத்துக்கே என்பதில் எந்தவீத ஆட்சேபனையும் இல்லை ஆகவே நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்படுவதன் மூலமே எம் உரிமையை வெல்வதற்க்காக அதிகமான பாராளு மன்ற பிரதி நிதித்துவத்தையும் வெளிநாட்டு உதவிகளையும் மிக இலகுவாக பெற்றுக் கொண்டு வாழ முடியும் என்பதே வெளிப்படையான உண்மையாகும் ..