பாறுக் ஷிஹான்
அல்பாக்கியாதுஷ் ஷாலிஹாத் பௌண்டேசன் றமழான் புனித அல்குர்ஆன் போட்டியில் வெற்றியீட்டியவர்களிற்கான பரிசளிப்பு விழாவினை நேற்று காலை (5) 9 மணியளவில் யாழ் கதீஜா மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தது.
இந்நிகழ்விற்கு பௌண்டேஷன் தலைவர் மௌலவி எம்.எஸ்.ஏ.எம் முபாறக் (நளீமி) தலைமை தாங்கியதுடன் மௌலவி எம்.ஏ அப்துல் அஸீஸ் (காஸிமி) பிரதம விருந்தினராகவும்,கதீஜா மகாவித்தியாலய அதிபர் செல்வி ஏ.சி ஜான்சி,யாழ் ஒஸ்மானியா கல்லூரி அதிபர் வ.மகேந்திரராசா,யாழ் கோண்டாவில் சி.சி.த.க.பாடசாலை அதிபர் திருமதி சி.நந்தகுமார்,ஈ சிட்டி கெம்பஸ் அதிபரும்,சங்கானை லயன்ஸ் கழகத்தின் புதிய தலைவருமான லயன்.ஜெ.றஜீவன்,யாழ் மாநகர சபை கலாச்சார உத்தியோகத்தர் மௌலவி எஸ்.ஏ.ஸி ரொசான் மதனி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
அத்துடன் பள்ளிவாசல் மௌலவிகள்,பள்ளி நிர்வாகத் தலைவர்கள் ,எழுத்தாளர்கள் ஆகியோர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டதுடன் வரவேற்புரை,தலைமையுரை,சிறப்பு பயான் என நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் உலமாக்கள் கௌரவிப்பு,முஅல்லிமார்கள் கௌரவிப்பு,அஹதிய்யா சீருடை,பாடத்திட்டம் என்பன அஹதிய்யா ஆசிரியர்களிற்கு அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
தொடரந்து புலமை பரிசில் நிதி வழங்கல் ,பாடசாலை நூலகங்களிற்கு நூல் வழங்கல் என்பதுடன் நிகழ்வு நன்றியுரையுடன் நிறைவடைந்தன.
இதன் போது நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.