தினேஷ் குணவர்த்தன தலைமை வகிக்கும் மக்கள் ஐக்கிய முன்னணி, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன கலந்து கொண்ட மத்தியகுழுக்கூட்டம் நேற்று இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மக்கள் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ யாப்பா ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.