‘ஆம்’- ‘இல்லை’ என்று அளிக்கப்படுகின்ற கருத்தறியும் வாக்கெடுப்பில் கிரேக்க மக்கள் வாக்களிக்கின்றனர் !

150705093024_alexis_tsipras_512x288_afp

 கிரேக்கத்துக்கு கடன் கொடுத்தவர்களின் சர்வதேச கடன்மீட்சித் திட்டத்தின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? இல்லையா ? என்ற கருத்தறியும் வாக்கெடுப்பில் அந்நாட்டு மக்கள் தற்போது வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர்.

வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்குப் பேசிய பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ், மக்களின் ஆணையை யாரும் புறந்தள்ள முடியாது என்று கூறினார்.

கடன்கொடுத்தவர்களின் யோசனைகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று சிப்ராஸின் இடதுசாரி அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடன்கொடுத்தவர்களின் நிபந்தனைகள் கிரேக்கத்தை ‘ஏளனம்செய்வதாக’ உள்ளதாக அரசாங்கம் வர்ணித்திருந்தது.

கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவு கடன்கொடுத்தவர்களின் யோசனைகளுக்கு எதிராக அமையுமானால், கிரேக்கம் அனேகமாக யூரோ வலயத்திலிருந்து வெளியேற நேரிடும் என்று ஐரோப்பியத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

வாக்கெடுப்பில், ‘ஆம்’- ‘இல்லை’ என்று அளிக்கப்படுகின்ற முடிவுகளுக்கு இடையே மிகநெருக்கமான போட்டி இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.