மைத்ரிபால சிறிசேனவுடன் கதைப்பதற்கு இனிமேல் எதுவும் இல்லை : சோபித தேரர் !

BUP_DFT_DFT-1-21

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் தேர்தல் தோல்விக்கு முக்கிய பங்களிப்பாற்றியவர்களில் ஒருவர் என கருதப்படும் மாதுளவாவே சோபித தேரர்  மகிந்த ராஜபக்சவிற்கு நியமனத்தை வழங்குவதென ஜனாதிபதி சிறிசேன தீர்மானித்ததை தொடர்ந்து அவருடனான தொடர்புகளை துண்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
மாதுளவாவே சோபித தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்காக அனுமதியை கோரியிருந்தார்.
ராஜபக்ச நியமனம் குறித்து கருத்துதெரிவிப்பதற்கு முன்னதாக ஓரு முறைசிறிசேனவை சந்திக்க விரும்புவதாகவும் அவர் அதன்போது தெரிவித்திருந்தார்.
எனினும் தேரர் கேட்டிருந்த நாளில் அவரிற்கு அனுமதி கிடைக்கவில்லை. மாறாக முன்னாள் ஜனாதிபதிக்கு நியமனம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியான பின்னர்  வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தேரரை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.
சோபித  தேரரை எதிர்வரும் நாட்களில் தன்னால் சந்திக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும் சிறிசேன , மகிந்த ராஜபக்சவிற்கு நியமனத்தை வழங்கியதன் மூலம் தன்னை கைவிட்டுவிட்டார் என  சீற்றத்தில் காணப்பட்ட தேரர், சிறிசேனவுடன் கதைப்பதற்கு இனிமேல் எதுவும் இல்லை என தெரிவித்துவிட்டார்.
நீங்கள் ஏற்கனவே உங்கள் விருப்பபடி செயற்பட்டுவிட்டீர்கள்,இதற்கு மேல் என்ன பேசஇருக்கிறது என தேரர் கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த சிறிசேன அது தன்னுடைய தீர்மானம் இல்லை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பின் தீர்மானம் என தெரிவித்துள்ளார்.
இதற்கு தேரர் அப்படியானால் அது குறித்து பகிரங்க அறிக்கையை விடுங்கள் என தெரிவித்துள்ளார். அது நடைபெறாததால் இருவரிற்கும் இடையிலான சந்திப்பும் நடைபெறவில்லை