போட்டியின்றி ஆசிய பிராந்தியத்துக்கான நிறைவேற்று பணிப்பாளராக அலிசாஹிர் மெளலான நியமணம் !

11698554_1163850786974908_2235846126383135103_n_Fotor

 

ஓட்டமாவடி அஹமட் இர்சாட்

 

 பொதுநலவாய நாடுகளில்(CHOGM) – “உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக நிலையான அபிவிருத்தியை நோக்கி” (2015- 2030) என்ற திட்டத்தின் “ஆசிய பிராந்தியத்துக்கான நிறைவேற்றுப் பணிப்பாளராக” முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , தற்போதைய கிழக்கு மாகான சபை உறுப்பினருமான கௌரவ . அலி சாகிர் மௌலானா அவர்கள் பொதுநலவாய நாடுகளின் அரச பிரதிநிதிகள் மத்தியில் நடந்த வாக்கெடுப்பின் போது ஏகமனதாக தெரிவு

கடந்த 16ஆம் திகதி 19ஆம் திகதி வரை தென் ஆபிரிக்க வலைய நாடுகளில் ஒன்றான பொட்ஸ்வானா(Botswana) நாட்டின் Gaborone நகரில் இடம் பெற்ற பொதுநலவாய நாடுகளின் உள்ளூராட்சி மன்ற அமையத்தின் வருடாந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் ஜனாதிபதிகள் , உப ஜனாதிபதிகள் , பிரதமர்கள் ,அமைச்சர்கள் , உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் , ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்றிருந்த நிலையில், இலங்கையின் சார்பில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜயசூரிய அவர்களும் , உள்ளூராட்சி அமையம் சார்பில் அலி சாகிர் மௌலானா அவர்களும் நாட்டை பிரதிநிதித்துவப் படுத்தி கலந்து கொண்டனர் –
இதன் போது “உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் நிலையான அபிவிருத்தியை நோக்கி ” எனும் தலைப்பில் அலி சாகிர் மௌலானா அவர்கள் தனது அனுபவத்தையும் , அறிவையும் கொண்டு 
அங்கு ஆற்றிய உரை மாநாட்டில் கலந்து கொண்டிருந்த அரச தலைவர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் பெரும் பாராட்டையும் இலங்கைக்கு பெருமையையும் தேடிக் கொடுத்தது – அதனை தொடர்ந்து மாநாட்டின் இறுதியில் பொதுநலவாய நாடுகளில் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு பொறுப்பாக ஒவ்வொரு பிராந்தியங்களுக்கும் பொறுப்பாக நிறைவேற்று பணிப்பாளர்களை தெரிவு செய்யும் வகையில் வாக்கெடுப்பு நடத்தப் பட்டது.

 அந்த வகையில் இலங்கை ,இந்தியா ,மலேசியா உட்பட பொது நல வாய அமையத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து ஆசிய நாடுகளையும் மையப்படுத்தி ஆசியாவிற்கான நிறைவேற்றுப் பணிப்பாளரை நியமிக்கும் பொருட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் ஒரு மித்த குரலில் அலி சாகிர் மௌலானா அவர்களின் பெயரை பரிந்துரை செய்தமையால் , போட்டி எதுவும் இன்றி மௌலானா அவர்கள் ஆசிய பிராந்தியத்துக்கான நிறைவேற்று பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்கள் .

  இதன் மூலம் பொதுநலவாய நாடுகளில் அங்கம் வகிக்கும் ஆசிய பிராந்திய நாடுகளில் – உள்ளூராட்சி நிருவாக அடிப்படையில் மேட்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளுக்கு பொறுப்பாக மௌலானா அவர்கள் செயற்படும் கௌரவம் கிடைக்கப் பெற்றுள்ளது .

மேற்படி மாநாட்டில் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக நிலையான அபிவிருத்தியை நோக்கி எனும் தலைப்பில் முன் வைக்கப்பட்ட பரிந்துரைகள் எதிர்வரும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்திலும் ,மற்றும் மோல்டா- பிரதமர் ஜோசப் மஸ்கட் (Joshep Muscat ) தலைமையில் மோல்டா நாட்டில் இம்முறை நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) சமர்ப்பிக்கப் பட்டு விவாதிக்கப் பட்டு அங்கிகரிக்கப்படும் .
ஆகவே உள்ளூராட்சி மன்றங்களை நோக்கிய நிலையான அபிவிருத்தி தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களால் கலந்துரையாடப் பட உள்ள விடயங்கள் இந்த அமையத்தின் மூலமே முன் வைக்கப்பட உள்ளன – இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பிட்குரிய ஆசிய பிராந்தியத்திட்கான நிறைவேற்று பணிப்பாளராகவே கௌரவ அலி சாகிர் மௌலானா அவர்கள் ஆசிய நாடுகளின் பிரதிநிதிகளால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் .

இது எமது இலங்கைக்கு கிடைத்த கௌரமும் பெருமையும் என்பதற்கு அப்பால் அவர் பிறந்த மண்ணுக்கும் ஊருக்கும் மிகவும் புகழை தேடித் தர கூடியவையாகும் – உண்மையில் மௌலானா அவர்களின் அனுபவமும் – நிலையான அபிவிருத்தி தொடர்பில் அவர் கொண்டுள்ள ஆர்வமும் அறிவும் , வினைத்திறன் மிக்க செயற்பாடுகளும் பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளாலும் , ஆசிய நாடுகளின் உறுப்பினர்களாலும் நன்கு அடையாளப்படுத்தப்பட்டு , குறித்த திட்டத்திற்கு மிகவும் தகுதியான ஒருவர் என்ற அடிப்படையில் அவருக்குரிய கௌரவம் அங்கு வழங்கி , மிகப்பெரும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது –

ஏறாவூர் நகர முதல்வராக கௌரவ அலி சாகிர் மௌலானா அவர்கள் பதவி வகித்த காலத்தில் மேட்கொள்ளப்பட்ட வினைத்திறன் மிக்க நிலை பேறான சேவைகள் அவரின் திட்டமிடலுக்கும் தலைமைத்துவ பண்பிற்கும் அனுபவத்திற்கும் நன்கு எடுத்துக் காட்டக்கூடிய விடயங்களாகும் –