மகிந்த ராஜபக்ச வை பிரதமராக்கி அழகு பார்க்க வேண்டிய தேவை தேசிய காங்கிரஸுக்கு கிடையாது.மகிந்தவோடு அதாஉல்லாஹ் வருவார் என பொய்யான புரளிகளை பரப்பி முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியில் ஒரு வகையான எதிர்ப்பு நிலையை உருவாக்க எத்தனிக்கின்றனர். அந்த சூழல் இன்ஷா அல்லா எதிர்வரும் நாட்களில் பொய்த்து போகும்.
மகிந்தவுக்கு ஜனாதிபதி தேர்தலில் அளித்த ஆதரவு என்பது கிழக்கின் பெருநிலப்பரப்பில் முஸ்லிம்களை நிம்மதி யாக வாழவைத்தமைக்கும் பள்ளிவாசல்களிலும் சந்தைகளிலும் பஸ் நிலையங்களிலும் வயல்களிலும் குண்டுகள் பொழிவதை நிறுத்தி யுத்தத்தை வெற்றி கொண்ட தார்மீகத்துக்காகவுமே.அதுவும் நாங்கள் ஐமசுகூட்டைப்புடனான புரிந்துணர்வின் அடிப்படையிலாகும்.இன்று அதே கூட்டமைப்பில் இருக்கிறோம் தேர்தலில் எவ்வாறு கூட்டமைப்பது அல்லது தனித்தா என்பது தொடர்பில் மக்களின் நலனில் எதிர்கால நலன் களை மையப்படுத்தியதாக எமது முடிவுகள் அமையும் இவ்வாறு நேற்று கொழும்மில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அக்கரைப்பற்று முன்னாள் மாநகரசபை உறுப்பினர் அஸ்மி ஏகபூர் தெரிவித்தார்.
மேலும் வரலாற்றில் கடந்து பத்தாண்டுகளாக மு. கா எவ்வாறான வழிகளில் முஸ்லீம் வாக்குகளை சூறையாடியிருக்கிறது பின்னர் எவ்வாறு அவ்விடயங்களை இழுத்தடிப்பு செய்திருக்கிறது என பார்ப்போம்.அட்டாளைச்சேனைக்கு எத்தனைமுறை எம்.பி கான வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது. நிறைவேற்றப்பட்டதா? பெரும்பான்மையாக வாக்களிக்கும் பொத்துவில்க்கு என்ன நடந்திருக்கிறது ? கரையோரமாவட்டம், தம்புள்ளை பள்ளி, நுரைச்சோலை சுனாமி வீடு வட்டமடு விவசாய நிலம் இன்னும் முஸ்லிம் களின் மீள் குடியேற்றம் எதுவுமே நிவர்த்தி செய்யப்படாத நிலையில் தமிழர்களிடம் இருக்கின்ற முஸ்லீம் களின் நிலங்கள் மீளக்கையளிக்கப்பட வேண்டும் த தேகூ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஐயா கூறுகின்ற போது அதற்கான முயற்சியில் ஈடுபாடு காட்டாமல் பதவிக்காக சமுகத்தை பயன்படுத்தும் அரசியல் வித்தகர்களின் விடயங்களை நம்ப இனி எம் சமுகம் தயாராக இல்லை. இந்த தேர்தல் அதற்கான தகுந்த பதிலை வழங்குமன்றார்.