ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று வியாழக்கிழமை (02) காலையில் ஸ்ரீகொத்தாவில் இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடனேயே இணைந்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ரவுப் ஹகீம் அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.
இதில் ஐ.தே.க தவிசாளர் மலிக் சமரவிக்கிரம, அமைச்சர் கபீர் ஹாஷிம் ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவது பற்றி ஆராயப்பட்டதாக தெரியவருகிறது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவது பற்றி ஆராயப்பட்டதாக தெரியவருகிறது.
இப்பேச்சுவார்த்தை நம்பிக்கையூட்டுவதாகவும், திருப்தியளிப்பதாகவும் அமைந்ததாக கூறப்படுகிறது.