UPFA , SLFP முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை !

Unknownஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் இன்று பிற்பகல் இரண்டினதும் தலைவரும் நாட்டின் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாபா ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்கப்படும் என ஜனாதிபதி தீர்மானித்த போதிலும், அதற்கு கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.

மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோர உள்ளதாக கட்சி உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் பிளவினைத் தடுக்க இவ்வாறு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரப்பட உள்ளது.