முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பு தனியான வேட்பு மனு தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் ஊடாக தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படாவிட்டால், தனியான கூட்டணி ஒன்றில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களை மஹிந்த தரப்பு ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்ஸ விடுத்த கோரிக்கையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், மஹிந்த ராஜபக்ஸ இரத்தினபுரி மாவட்டத்தில் அல்லது குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு அளித்த முக்கிய உறுப்பினர்களுக்கு சுதந்திரக் கட்சியில் சந்தர்ப்பம் அளிக்கப்படாது என குறிப்பிடப்படுகிறது.