குற்றச் செயல்களில் ஈடுபடாதவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதனை ஜனாதிபதியும் , பிரதமரும் உறுதி செய்ய வேண்டும் – கபே

imagesகுற்றச் செயல்களில் ஈடுபடாதவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உறுதி செய்ய வேண்டுமென கபே அமைப்பு கோரியுள்ளது.

ஊழல் மோசடிகள் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது சுதந்திரக் கட்சியோ வேட்பு மனு வழங்கினால் அதற்கான பொறுப்பினை பிரதமர் அல்லது ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டுமென கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவிதத்தள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு வேட்பு மனு வழங்கப்படாது என ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியளித்துள்ளர் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

எனினும், குற்றச் செயல்கள் ஊழல் மோசடிகளில் தொடர்புடைய சிலர் ஏறந்கனவே தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியின் தலைவர்கள் நேர்மையான பொருத்தமானவர்களை நியமித்தால் புதிய அரசியல் கலாச்சாரமொன்றை உருவாக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கட்சிகள் இந்தப் பொறுப்பினை உரிய முறையில் செய்யாது குற்றச் செயல்களுடன் தொடர்புடைய வேட்பாளாகளை களமிறக்கினால் ம்கக்ள அதனை நிராகரிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.