தேசிய போக்குவரத்து அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் முதலமைச்சரால் திறந்து வைப்பு

DSC_4855_Fotor

 

 தேசிய போக்குவரத்து அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் இன்று(01)புதன்கிழமை காலை மட்டக்களப்பு –திருகோணமலை பிரதான வீதியிலுள்ள  சந்திரா ஒழுங்கையில்; திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் சமந்த வி.அபேவிக்ரம தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மா.நடராஜா, சிப்லி பாறூக் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

இதுவரை காலமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தற்காலிக கட்டடத்தில் இயங்கிவந்த தேசிய போக்குவரத்து அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம், கிழக்கு மாகாணசபையின் ஐந்து மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் திருகோணமலைக்கு சென்று தங்களது வாகன வீதி அனுமதிச் சான்றிதல் பெறப்பட்டு வந்த சில சேவைகளும் இந்த நிலையம் ஊடாக வழங்கப்படவுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் போக்குவரத்துத் துறை எந்த மாகாணத்திலும் இல்லாதவாறு அதி நவீன முறையில் திருத்தியமைக்க முயர்சிக்கிறேன் என்று குறிப்பிட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முதலமைச்சர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

DSC_4859_Fotor
DSC_4865_Fotor
DSC_4875_Fotor