ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்தால் அது திருடர்களுடன் நிர்வாணமாக நிற்பதற்கு சமமானதாகும் என வர்ணிக்கும் ஜே.வி.பி.யின் ஊடகப்பேச்சாளரும் முன் னாள் எம்.பி.யுமான விஜித ஹேரத், எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையும் ஐ.தே.க.வையும் மக்கள் நிராகரிக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.
பன்னிப்பிட்டியிலுள்ள ஜே.வி.பி.யின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே விஜித்த ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஊழல் மோசடிகள்இ வீண் விரயங்கள் நிறைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் அவரது கட்சி சார்பானவர்களையும் ஜனவரி 8ஆம் திகதி மக்கள் நிராகரிக்கத்தார்கள்.
புதிய நல்லாட்சிக்கான எதிர்பார்புடன் ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேனவையை தெரிவுசெய்தனர்.
ஐ.தே.க.இ மைத்திரி ஆட்சி 100 நாட்கள் காலக்கெடுவுடன் முன்னெடுக்கப்பட்டபோதும் மக்களும் நாடும் எதிர்பார்த்த விடயங்கள் எதுவும் நடைபெறவில்லை. 175 நாட்கள் ஆட்சி தொடர்ந்தும் சாதகமான விடையங்கள் சிறியளவிலேயே இடம் பெற்றன. மஹிந்த ஆட்சியைப் போன்றே இந்த ஆட்சியும் செயற்பட்டது. ஊழல் மோசடிகள் தொடர்பாக தகவல்கள் வழங்கப்பட்டது. ஆனால் அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் பிணை முறிவு தொடர்பான மோசடிகள் தொடர்பாக கோப் அறிக்கை வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டது. இவ்வாறு மஹிந்த ஆட்சியை போன்றே கடந்த ஆட்சி செயற்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமைப்பதவியை பெற்றுக்கொண்டு தனது கட்சியை பாதுகாப்பதிலேயே அதிக அக்கறை காட்டுகின்றார்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட மஹிந்தவையையும் அவரது அணியையும் இணைத்துக் கொண்டு மீண்டும் மஹிந்தவுக்கு ஆட்சியை கையளிக்க முயற்சிக்கின்றார். அதற்காக இரகசியமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.
மக்கள் இதற்காக மைத்திரிக்கு ஆணை வழங்கவில்லை. இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் ஆணையை உதாசீனம் செய்து விட்டு தனது கட்சியை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
எனவே ஜனாதிபதி மைத்திரிஇ மஹிந்த அணியின் திருட்டுக்கும்பலுடன் நிர்வாணமாக நிற்கும் நிலைமையையே காணக்கூடியதாகவுள்ளது. சுதந்திரக்கட்சியும் ஐ.தே.க.வும் பழமையான பிழையான கைங்கரியங்களையே முன்னெடுக்கின்றன. எனவே மக்கள் இரண்டு கட்சிகளையும் நிராகரித்து ஜே.வி.பிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
ஜே.வி.பிக்கு இத்தேர்தலில் பெரும்பான்மையை வழங்கி பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரித்து பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் என்றும் விஜித்தஹேரத் தெரிவித்தார்.