மஹிந்த ராஜபக் ஷ இந்நாட்டின் பிரதமரானால் அவரது அமைச்சரவையில் வெள்ளை வேன் கடத்தலுக்கு பொறுப்பானவர் யார்? எதனோல் போதைப்பொருள் மற்றும் கஸினோவுக்கு பொறுப்பாக உள்ளவர் யார்? திருடர்களுக்கு உறுதுணையாக செயற்படுபவர்கள் யாரென்பதை மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என சவால் விடுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலைப்பொன்று ராஜபக்ஷ அணியை பொதுத்தேர்தலில் மண் கவ்வ வைப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
கலேவெலவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.கட்சி அமைப்பாளர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் இங்கு மேலும் தெரிவித்திருப்பதாவது,
எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான அனைத்து ஆயத்தங்களையும் ஐதே கட்சி மேற்கொண்டுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கொள்கை பிரகடனத்திற்கு அப்பால் சென்ற நாட்டினதும் மக்களினதும் நன்மைகளையும் அபிவிருத்திகளையும் இலக்கு வைத்ததாக அமைந்துள்ளன.முக்கியமாக நல்லாட்சிக்கான அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மஹிந்த சிந்தனையை போன்று பொய்யான வாக்குறுதிகள் எம்மிடம் கிடையாது.
தேர்தலுக்கு நாம் தயார். ஆனால் முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எம்மு டன் போட்டி போடத்தயாரா? இல்லாவிட் டால் பயத்தால் ஒதுங்கிக் கொள்ளப்போகின்றாரா?
முடிந்தால் பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டு என்னை தோல்வியடைச்செய்து காட்டுமாறு சவால் விடுக்கின்றேன்.
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ அணியை தோல்வியடையச் செய்தது போன்று பொதுத்தேர்தலில் மஹிந்த அணி களமிறங்கினால் குழிதோண்டிப்புதைத்து விடுவோம்.
மஹிந்தவுக்கும் அவரது அணிக்கும் மீண் டும் தலைதூக்க இடமளிக்கமாட்டோம்.பத்து வருடங்களாக மஹிந்த ஆட்சியில் மக்களுக்கு எதுவிதமான சலுகைகளும் தேவைகளும் வழங்கப்படவில்லை.
ஆனால் நாம் 100 நாள் வேலைத்திட்டத் தில் மக்களுக்கு பல சேவைகளை சலுகைகளை வழங்கினோம்.எதிர்காலத்தில் நாட்டில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி இளைஞன் யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வுகளையும் திட்டத்தை வகுத்துள்ளோம்.
எமது ஆட்சியின் கீழ் எவராவது போதைப் பொருள் அல்லது எதனோல் கொண்டு வந் தால் சிறையில் அடைப்போம். மக்களுக்கு சேவை செய்பவராக இருந்தால் எமது கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அல்லது வேறு கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் எமது ஆதரவை வழங்குவோம்.இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யினர் தமது தலைவரான ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேனவுக்கும் எதிராக செயற் படுகின்றனர் என்றும் பிரதமர் தெரிவித்துள் ளார்.