உயர்தரப் பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் வாக்குகள் எண்ணப்படாது!

mahinda-deshapriya-election-commior
உயர்தரப் பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் வாக்குகள் எண்ணப்படாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

இம்முறை உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் எந்தவொரு பாடசாலையிலும், பொதுத் தேர்தல் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படாது. 

வாக்கு எண்ணும் நிலையமொன்றை அமைப்பதற்கு குறைந்த பட்சம் ஐந்து நாட்கள் தேவைப்படும். 

அவ்வாறு ஐந்து நாட்கள் செலவிட்டு வாக்கு எண்ணும் நிலையம் அமைத்தால் அது பரீட்சைகளை பாதிக்கும். 

கண்டி, கொழும்பு, பதுளை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்கு எண்ணும் நிலையங்களில் அமைக்கும் போது சிக்கல்கள் ஏற்படக் கூடும். 

சிக்கல்களை நிவர்த்தி செய்ய ஏதாவது மாற்று வழி ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். 

439 பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.