ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக் ஷவை நியமிக்கக் கோரி ஜனாதிபதி நியமித்துள்ள ஆறு பேர் கொண்ட குழுவினர் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளனர். குழுவினரின் இறுதி அறிக்கையினை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளனர்.
நடைபெறவிருக்கும் பொதுத் தேர்த லில் சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் யாரை பொது வேட்பாளராக நிய மிப்பதென்ற சிக்கல் நிலைமை தோன் றியுள்ள நிலையில் கட்சிக்குள் தொடர்ச்சியான முரண்பாடுகள் எழுந்துள்ளன.
கட்சியை ஒன்றிணைத்து அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைமைகள் முக்கிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் முக்கிய சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் ஏனைய முக்கிய உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றது. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் பங்காளிக் கட்சிகளை இணைத்துக்கொண்டு பலமான கூட்டணியாக களமிறக்கும் நோக்கத்தில் அணைத்து தலைமைகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன கேசரிக்கு தெரிவிக்கையில் ,
இந்த பேச்சுவார்த்தையின் போது கட்சியின் வேட்பு மனுத்தாக்கல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கட்சியாக ஸ்ரீலங்கா சதந்திரக் கட்சி அங்கம் வகிப்பதனால் வேட்பு மனுத்தாகளின் போது ஏனைய கட்சிகளை விடவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் இதனால் ஏனைய கட்சிகள் புறக்கணிக்கப்படும் வாய்புகள் இருப்பதாகவும் கட்சிகள் தமது நிலைப்பாட்டினை முன்வைத்தனர் . எனினும் கட்சியில் அனைத்துப் பங்காளிக் கட்சிகளையும் பாதுகாக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் வேட்புமனு தயாரிக்கபடும் எனவும், குற்றவாளிகள் மற்றும் கட்சியில் கடந்த காலத்தில் குழப்பம் விளைவித்த மோசடிக்காரர்கள் யாரையும் இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்தரக் கட்சின் சார்பில் களமிறக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை கட்சியின் பிரதமர் வேட்பாளராக நியமிக்கும் திட்டம் இல்லை எனவும், தேசியப் பட்டியலில் கூட இடமில்லை என தெளிவாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக நியமிப்பதா இல்லையா என்பதை ஆராயும் வகையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட ஆறு பேர் உள்ளடங்கிய குழுவினர் தமது அறிக்கையை இன்று ஜனாதிபதி மகிதிர்பால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளனர். இது தொடர்பில் குழுத் தலைவர் டிலான் பெரேரா தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் கடந்த சில காலமாகவே கட்சிக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ள நிலையில் கட்சியின் பெரும்பான்மை ஆதரவை ஆராயும் வகையில் நாம் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம். அதன் இறுதி முடிவை நாளை (இன்று ) ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவுள்ளோம். இதன் பொது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்துள்ளோம். எனவே ஜனாதிபதி எந்தத் தீர்மானத்துக்கு இணக்கம் தெரிவிப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. கட்சியின் ஒருமித்த கருத்தும் இதுவே என அவர் குறிப்பிட்டார்.
இதேவேலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் ஆராயும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பிரதான உறுப்பினர்கள் நேற்று விசேட சந்திப்பொன்றை நடத்தினர். சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமாஜெயந்த மற்றும் எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா ஆகிய மூவரும் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எனினும் இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் மூவரும் ஊடகங்களுக்கு எவிதக் கருத்தையும் தெரிவிக்காது தவிர்த்துள்ளனர். இந்த பேச்சுவாதையின் போது மஹிந்தவை பிரதமர் வேட்பாளர் ஆக்கும் கட்சியின் தீர்மானம் தொடர்பில் மூவரும் இரகசியம் காத்து வருகின்றனர். எனினும் இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சசுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகின்றது .