ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கு மூச்சு விடுவதுக்கு சிறிய இடைவெளியை கொடுக்கும் பொருட்டு சர்வதேச கிரிக்கெட் சபை புதிய விதிகளை அறிமுகபடுத்தியுள்ளது.
இதன் பொருட்டு இன்னிங்ஸின் முதல் 10 ஓவர்களில் உள் வட்டத்துக்கு வெளியே எத்தனை களத்தடுப்பாளர்களும் நிற்கலாம் என்றும், துடுப்பாட்ட பவர்பிளேயை நீக்குவதென்றும், இன்னிங்ஸின் இறுதி 10 ஓவர்களில் உள்வட்டத்துக்கு வெளியே 5 களத்தடுப்பாளர்கள் நிற்கலாம் என்றும், அனைத்து வகையான நோபோலுக்கும் ஒருநாள் போட்டிகளிலும், இருபது – 20 போட்டிகளிலும் ப்ரீஹிட் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜூலை 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. இந்த திருத்தங்கள் கடந்த மே மாதம் அனில் கும்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டியால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.