பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் விஷேட தேவையுடையோர் மற்றும் வறிய இளம் விதவைகளுக்கான வருடாந்த ரமழான் உலர் உணவு விநியோக நிகழ்வு 28-06-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், அம்பாறை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ரீ.எம்.அன்சார்,காத்தான்குடி ஸாஹிறா விஷேட பாடசாலையின் முகாமையாளர் எம்.எச்.ஏ.எம்இஸ்மாயில், சமூக சேவையாளரும்,பிலால் எம்போரியத்தின் உரிமையாளருமான கலீல் ஹாஜியார்,முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிராந்திய பொறுப்பாளர் ஏ.எல்.ஜூனைட் நளீமி,காத்தான்குடி மத்தியஸ்தர் சபையின் தலைவர் உசனார் ஜேபி, தென் கிழக்கு பழல்கலைக்கழக விரிவுரையாளர் சீ.எம்.எம்.மன்சூர்,மட்டு-மத்தி கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ.அப்துல் கபூர் (மதனி), சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் பொருளாளர் எம்.எம்.எம்.தாஹிர் அதன் உப தலைவர் எம்.ஐ.ஏ.நஸார் உட்பட அதன் உறுப்பினர்கள், உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள்,பெரும் திரளான பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு சிறப்புரையை ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட வரிவுரையாளர் மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் (பலாஹி) நிகழ்த்தினார்.
இதன் போது விஷேட தேவையுடையோர் மற்றும் வறிய இளம் விதவைகள் 550 பேருக்கு ரமழான் உலர் உணவுப் பொதிகள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வு காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் நான்கு வருடங்களுக்குள் 34 வது சமூகத்தை நோக்கிய பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.