அம்பாறை மாவட்ட தேர்தல் களம் மு.காவுக்கு விஷப்பரீட்சை !!!!

SLMC
 மருதூர் அபூ அப்துல்லாஹ் 
 நேற்று நள்ளிரவுடன் (26/06/2015) கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ளதுடன்,இதற்கான வேட்பு மனுத்தாக்கல் எதிர்வரும் ஜூலை மாதம் 6ம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரை கோரப்படவுள்ளன.
நடைபெறுவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்ட தேர்தல் களம்,சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு விஷப்பரீட்சை தேர்தல் களமாகவே இருக்கப் போகின்றது.
சாய்ந்தமருது நகரசபையை வழங்காது கால இழுத்தடிப்பு செய்தமை,கல்முனை மாநகரசபை முன்னால் மேயர் சிராஸ் மீராசாஹிப் மற்றும் பிரபல சமூக ஆர்வலர்  அன்வர்  எம் முஸ்தபா அ.இ.ம.காவில் இணைந்து கொண்டமை,முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான AM  நெளசாத் தேசிய ஐக்கிய முன்னணியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டமை,பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தலைமையிலான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அம்பாறை மாவட்டத்தில் தனது வேட்பாளர்களை நிறுத்தவுள்ளமை,
சம்மாந்துறையில் பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் போட்டியிட தயாராகி வருகிறமை,மருதமுனை உள்ளூராட்சிசபைப் பிரச்சினை போன்றவற்றால், அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு பாரிய வாக்குச்சரிவு ஏற்படும் நிலையே காணப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
வேட்பு மனுத்தாக்கல் முடிவதற்குள் பல பிரபலங்களின் கட்சித் தாவல்கள் எதிர்பார்க்கப்படுவதனால் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பல திருப்பங்களை ஏற்படுத்தலாம்.