திஸ்ஸமாகராமையில் வாழும் 182 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1 இலட்சம் ருபா வீதம் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டது.
இத்திட்டம் வீடமைப்பு சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் முன்னெடுக்கப்பட்டது. இவ் நிகழ்விற்கு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளி ஒருவருக்கு வீட்டுக்கடன் வழங்குவதையும் அருகில் அமைச்சர் சஜித் பிரேமதாச, திருமதி சஜித் ,பிரதியமைச்சர் திலிப் வெதஆராச்சி படத்தில் காணலாம்.