பொதுத்தேர்தல் காலப்பகுதியில் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார்.
இதன்போது, திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதம் 17, 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறாது என தெரிவித்தார்.
பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் ஆணையாளர் மாற்றியமைப்பார் என தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், பரீட்சைகள் இடம்பெறவுள்ள பாடசாலைகள் வாக்கெண்ணும் நிலையங்களாகப் பயன்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.