சாய்ந்தமருது பிரதேச சபை -இத் துரும்பு மக்கள் முன் எறியப்படும் : மொஹிடீன் பாவா !

images

உமர்

சாய்ந்தமருது பிரதேச சபை பற்றி ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி யெழுப்பினார்.

அதற்குப் பதிளித்த அமைச்சர் ஹக்கீம்,

 சாய்ந்தமருது பிரதேச சபையைப் பொறுத்தவரை,நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்கின்ற குழுவின் அறிக்கை உரிய அமைச்சரினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

அதை வர்த்தமானியில் பிரசுரித்த பின்னர் தான் மீண்டும் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் விஷயத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை பொது நிர்வாக   உள் நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் தடல்லகே அதிலுள்ள நியாயங்களை எங்களுக்கு சொல்லியிருக்கிறார். அவ்வாறன வர்த்தமானி அறிவித்தலின் பின்னர் தான் சம்பந்தப்பட்ட அமைச்சு நடவடிக்கை எடுக்கும். 

சாய்ந்தமருது பிரதேச சபை கோரிக்கை பற்றி   தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி பல தடவை சொல்லி உள்ளது சாய்ந்தமருது பிரதேச சபை கிடைக்க மாட்டாது  என்று 

இப்போது இக் கோரிக்கை இப் பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு பலம் வாய்ந்த  துரும்பாக அகப் பட்டுள்ளது , இத் துரும்பு  மக்கள் முன் எறியப்படும் 

எதிர்வரும் தேர்தலில் மக்கள் மீண்டும் முஸ்லிம் காங்கிரசின் வார்ததைகளை நம்பி  சோரம் போகாமல் மிக எச்சரிக்கையுடன் இருக்கும் படி தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா உங்களைக் கேட்டுக் கொள்கிறார்.