புத்தளம் ஆசிரியர் ஹாஜா சஹாப்தீன் – அவர்கள் மீது போலிக் குற்றச்சாட்டுக்கள் : நியாயம் கோருகிரார் ஆசிரியர் பதில் அளிக்குமா இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி!

 

முதல் பதிவின் தொடர்……… (எனது முதல் பதிவினை வாசிக்க தவறியவர்கள் இதனை வாசிக்க முன்பு முதல் பதிவை வாசிக்கவும்)

முதல் பதிவு  : https://www.facebook.com/haja.sahabdeen.9/posts/1666109830277745

”பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
15.06.2015
முகாமையாளர், 
இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக்கல்லூரி,
185, மன்னார் வீதி, 
புத்தளம். (பதிவுத்தபால் 9028) 
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அதிபரால் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையிட்டு விசாரணை நடாத்தி நீதியை நிலை நாட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரல்.
எந்தவித எழுத்து மூலமான நியமன ஒழுங்குகளுமின்றி அதிபர் மூலமாக கல்லூரியில் சேவையில் இணைந்து கொண்டு கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக நான் செய்த பணிகள் என்னவென்பதை பட்டியலிட நான் விரும்பவில்லை.என்றாலும் நிர்வாகத்தின் முன் அனுமதியின்றி ஒரு குண்டூசி அளவாவது ஒரு நடவடிக்கையை நான் மேற்கொண்டதில்லை.
(இதனை உங்கள் முன்னிலையில் ஆசிரியர் இஸ்மத் அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்) இந்த நிலையில் நீண்ட காலமாக அதிபரது முன்னுக்குப் பின் முரணான சில நடவடிக்கைகளால் விரக்தியுற்று சில நாட்களுக்கு முன்னர் கல்லூரியிலிருந்து விலக தீர்மாணித்த போது நல்லபிப்பிராயம் கொண்ட சிலரால் நிலைமையை சுமுகமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டதை நான் அறிவேன்.
இதில் ஒரு கட்டமாக எமது சக ஆசிரியர் ஒருவர் அதிபருடன் இதுபற்றி கதைத்த போது, நான் அவரிடம் (1) பொய்யொன்றை சொல்லியுள்ளேன் என்றும் (2) இஸ்லாஹிய்யாவில் எனக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் உள்ளனவென்றும் (3) நான் அயலவர்களோடு பகைமை பாராட்டும் ஒருவனென்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதில் அவரால் முன்வைக்கப்பட்டுள்ள (2) ஆம் குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனது ஆசிரியர் பணியில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக நான் பணியாற்றிய சிங்கள, தமிழ், முஸ்லிம் சகல பாடசாலைகளிலிருந்தும் என்னை மரியாதையோடும், கண்ணியத்தோடும் வழியனுப்பி வைத்துள்ள நிலையில் , என் மேது அதிபர் முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகளையிட்டு நான் மிகவும் கவலையடைகிறேன். எனது மனம் இந்த குற்றச்சாட்டினால் மிகவும் வேதனையடைந்துள்ளது.அல்லாஹ்வுக்காக எனது உடல் நிலைமையையும் பாராது இஸ்லாத்துக்காகவும், கல்லூரிக்காகவும் நான் செய்தவற்றுக்கு எனக்கு கிடைக்கும் கைம்மாறு இதுவா? அதிபரது இந்த கூற்றுக்கான ஆதாரங்களை அவர் முன் வைக்க வேண்டும். அந்த குற்றச் சாட்டுக்கள் உண்மையாக இருந்தால் நான் விசாரணைக் குழு விதிக்கும் எந்தவித அபராதத்தையுமோ, அல்லது தண்டனையையுமோ ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன் என்பதோடு, இது விடயத்தில் (இறைவன் மேல் ஆணையாக ) நீங்கள் முன்னின்று இந்த விசாரணையை துரிதப்படுத்துமாறு தயவுடன் வேண்டிக்கொள்கின்றேன். ஏனென்றால் அதிபர் முன் வைக்கும் குற்றச்சாட்டு இதுவரை சமூகத்தில் எத்தனை பேரை சென்றடைந்துள்ளதோ எனக்குத் தெரியாது. 

அதுவும் ஒரு பெண்கள் கல்லூரியின் அதிபரால் குற்றச் சாட்டு முன் வைக்கப்படுவது பல கோணங்களில் சந்தேகங்களை தோற்றுவிக்கும்.

 சில சமயம் என் மீது அவதூறாக சிலர் அதிபரிடம் தவறான தகவல்களை சொல்லி இருக்கலாம். அதனை அவர் என்னிடம் நேரடியாக விசாரித்திருக்கலாம், அல்லது நிர்வாகத்தினர் மூலமாக என்னை விசாரித்திருக்கலாம். அவற்றையெல்லாம் தவிர்த்து அவரது இந்த நடவடிக்கை சமூகத்தில் என்னளவில் எந்தளவு பாதகமான – மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, எனது தன் மானம் கருதி இதற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். அதுவரை நானாகவே சேவையிலிருந்து ( இன்றிலிருந்து) விலக முடிவு செய்துள்ளேன். 

குறிப்பு:- தயவு செய்து இது சம்பந்தமாக 22.06.2015 ஆம் திகதிக்கு முன்னர் எனக்கு நிர்வாகத்தினரின் முடிவை அறிவிக்குமாறு வேண்டுவதோடு இன்ஷா அல்லாஹ் அது தவறும் பட்சத்தி எனது அடுத்த கட்ட நகர்வினை மேற்கொள்ள எண்ணியுள்ளேன் என்பதையும் தயவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். ”வல்ல அல்லாஹ் நமது எல்லா நற்செயல்களையும் பொருந்திக்கொள்வானாக” இப்படிக்கு உண்மையுள்ள, எம்.எல்.ஹாஜா சஹாப்தீன்.
பிரதிகள்:- 1. சகோதரர் ஏ;சீ;எம்; நபீல், தலவர், நிர்வாகக்குழு (பதிவுத்தபால் 9029) 2. அதிபர், இஸ்லாஹிய்யாஹ் பெண்கள் அரபுக்கல்லூரி, 185, மன்னார் வீதி, புத்தளம். (பதிவுத்தபால் 9027)
———————————————————————————————————–
குறிப்பு இதற்கு இந்த நிமிடம் வரை ஒரு தொலைபேசி அழைப்பாவது எனக்கு எடுக்கவில்லை. போதாமைக்கு சில நாசகாரிகளை ஏவி விட்டு எனக்கெதிராக சமூகத்தில் விஷ விதைகளை தூவப்படுகின்றன. நீங்கள் யாராவது விரும்பினால் விசாரித்து எனக்கெதிரான குற்றச்சாட்டுகளை கேட்டு சொல்லுங்கள்.( மனேஜர் 0777859905 /அதிபர் 077 3171726)