நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதம் தொடர்பில் 2014ம் ஆண்டிற்காக அமெரிக்கா வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் இது உறுதியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமீழீழ விடுதலை புலிகள் அமைப்பினை இலங்கையினுள் யுத்த மூலம் தோல்வியடையச் செய்த போதிலும், சர்வதேச ரீதியில் தமீழீழ புலிகள் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் அமெரிக்கா வெளியுறவுத்துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் நாடாளுமன்றில் இன்று வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட உரையில் தற்போதைய அரசாங்கத்திற்கு இவை பொருத்தமானதல்ல என அவர் கூறியுள்ளார்.
நாடுகளுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கடந்த அரசாங்கத்தினாதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு மாறாக வேறு செயற்பாடுகள் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.