மஹிந்த, மைத்திரியை இணைக்கும் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்ததை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் வீட்டில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னரே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்க்ப்படுகின்றது.
சந்திரிக்கா வீட்டில் இடம்பெற்ற விசேட கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அவருக்கு நெருங்கிய அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதற்கமைய அங்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னர், முதலில் அநுர யாப்பாவையும் அதனை தொடர்ந்து சுசில் பிரேம ஜயந்தவையும் அப்பதவிகளில் நீக்கிவிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட வேண்டும் எனவும், சிறு கட்சிகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதுமே முன்னாள் ஜனாதிபதியின் கொள்கையாக காணப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜாதிக ஹெல உறுமயவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கீழ் போட்டியிடுவதற்கு ஆயத்தமாக உள்ளார் என குறித்த கூட்டத்தின் போது கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது