தேசிய சுதந்திர முன்னிணயின் தலைவர் விமல் வீரவன்சவும், பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய முயற்சிப்பதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியை பிளவடையச் செய்ய இடமளிக்கக் கூடாது.
கட்சியை பிளவடையச் செய்யும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம்.
கட்சியை பிளவடையச் செய்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது பிரதிநிதியை களமிறக்க முடியும் என விமல் வீரவன்ச கருதுகின்றார்.
கட்சியை உடைத்தால் எனது பிரதிநிதிகளையும் மாவட்டங்கள் தோறும் போட்டியிடச் செய்ய முடியும் என உதய கம்மன்பிலவும் நினைக்கக் கூடும்.
எனினும் கட்சியை பிளவடையச் செய்ய இடமளிக்கக் கூடாது என எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் பதுளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாவட்டக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது இந்தக் குற்றச்சாட்டுக்களை அவர் முன்வைத்துள்ளார்.