சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பொலிஸ் தலைமையகத்தின் குற்றப்பிரிவு 24 மணி நேரமும் செயற்படவுள்ளதால் போதைப்பொருட்கள் தொடர்பில் பொதுமக்கள் தகவல் வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அதனை முன்னிட்டே இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் எப்பகுதியிலாவது சட்டவிரோத மதுபான விற்பனை, போதைப்பொருள் விநியோகம் குறித்து தகவல் கிடைக்கப்பெற்றால் பொலிஸ் தலைமையகத்தின் குற்றப்பிரிவிற்கு 24 மணி நேரமும் தகவலை வழங்க முடியும். அத்தகவலுக்கு அமைய சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கமைய 011 3024825/ 011 324826/ 070 3117117/ 070 3118118 / 070 3119119 ஆகிய தொலைபேசி இலக்கங்களூடாகவும் 011 2333496 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும், [email protected] என்ற மின்னஞ்சல் ஊடாகவும் பொது மக்கள் தகவல்களை வழங்க முடியுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.