யாழ்.மாவட்டத்தில் இரவில் வீதியில் ஒன்று கூடுபவர்கள் கைது செய்யப்படுபவர் :யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வூட்லர் !

01071_Fotor
பாரூக் சிகான் 
யாழ்.மாவட்டத்தில் இரவு 7.30 மணிக்குப் பின்னர் தேவையற்ற விதத்தில் வீதியில் ஒன்று கூடுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்டகள்.கைது செய்யப்படுபவர்கள் மாணவர்களாக இருந்தாலும் மன்னிப்புக் கிடையாது என்று யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வூட்லர் எச்சரிக்கை செய்துள்ளார்.
 பிள்ளைகளுடைய நடவடிக்கைகள் தொடர்பில் எந்த நேரமும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். பிள்ளைகளுடைய நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் உடன் பொலிஸாருக்கு அறிவியுங்கள் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப் பொருள் பாவனை தொடர்பில் பெற்றோர்களுக்கு விளிப்புணவர்வு விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரியில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.அக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை விற்பனை அதிகரித்து வருகின்றது. இவற்றில் கவலை தரக்கூடிய விடையம் என்னவென்றால் மாணவர்கள் மத்தியில் இப் போதைப் பொருள் பாவனை அதிகரித்துச் செல்லுகின்றது என்பதே.
மாணவர்கள் மத்தியில் காணப்படும் போதைப் பொருள் பாவனையினை கட்டுப்படுத்துவது அனைவருடைய பொறுப்பாகும். குறிப்பாக பொற்றோர்கள் ஒவ்வொருவதும் தம்தமது பிள்ளைகளுடைய அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். அவர்களுடைய நடவடிக்கைகளில் மாறுதல் ஏற்பட்டால் உடனடியாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்துங்கள்.
மாணவர்கள் மத்தியில் உள்ள போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தற்போது பாடசாலைகள் முன்பாக உள்ள ஜஸ்கிறீம் வெற்றிலை மாங்காள் வியாபாரக் கடைகளை அகற்றியுள்ளோம். போதைவஸ்துக்களை விற்பனை செய்தவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளோம். பாடசாலைகளை மையப்படுத்தி ரோந்து சேவைகளை ஆரம்பித்துள்ளோம்.
இவ்வாறு போதைப் பொருட்களை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். ஆனால் இவற்றைக் கட்டுப்படுத்த பொது மக்களாகிய நீங்களும் ஒத்துழைப்புத் தரவேண்டும்.உங்களுடைய பிள்ளைகளை இரவு வேளைகளில் தேவையற்ற விதமான வீpதகளில் திரிய விடவேண்டாம். இவ்வாறு வீதிகளில் நிற்பவர்ளே போதைப் பொருட்களுக்கு அடிமையாகின்ற சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளது.
இனிவரும் காலங்களில் இரவு 7.30 மணிக்கு பின்னர் வீதிகளில் நிற்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மாணவர்களாக இருந்தாலும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு கைது செய்பவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு தண்டணையும் பெற்றுக் கொடுக்கப்படும்.என்றார்.