கண்டுபிடிக்க உதவுவீர் !

1
உண்மையின் பக்கம் 
 
 இன்று ஒரு தாயின் மன வேதனையை இங்கு பதிவிடுகிறேன். இந்த தகவலை படித்து அதனை உங்கள் நண்பர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எத்தி வைப்பதன் மூலம் ஒரு பிரதிபலனை பெறமுடியும் என்று நம்புகிறேன்.
அதாவது ALIYAR RINOOS 304,UNIT 07,MULLIPOTHANA, KANTHALE. கடவுச்சீட்டு இல N 4022903 எனும் நபர் 2012 DEC 09 எனும் திகதியில் AMAL SULTHAN TRAVELS & RECRUITMENT NO 540 1/1, 1l2 FIRST FLOOR, MARADHANA, COLOMBO -10 எனும் பதிவுசெய்யப்பட்ட முகவரினுடாக AL RAJ COMPANY எனும் சவூதி அரேபியாவில் உள்ள ஒரு கம்பனிக்கு வேலை நிமித்தம் அனுப்பபட்டுள்ளார், அவர் அங்கு சென்று ஓரிரு மாதங்கள் அவருடைய சம்பளங்களையும் தனது வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.
அதனை தொடர்ந்து சிலநாட்களில் அவருக்கு மனோநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவரின் நண்பர்கள் மூலம் அவரது வீட்டுக்கு நிலைமை அறிவிக்கப்பட்டதை அடுத்து வீட்டில் உள்ளவர்களும் அதனை உறுதி செய்துகொண்டு அவரை மீண்டும் நாட்டுக்கு வரவழைப்பதற்கான ஆயதங்களை மேற்கொண்டுள்ளனர்.
அவ்வேளை குறித்த சகோதரர் தான் இருந்த விடுதியை விட்டு சக நண்பர்கள் இல்லாதநேரம் தன்னை அறியாத நிலையில் வெளியேறி உள்ளார்,
அன்று முதல் இன்று வரை இரண்டரை வருடங்களாகியும் ALIYAR RINOOS பற்றிய எந்தவொரு உத்தியோபூர்வ தகவலும் இல்லாத நிலையில் அவரது குடும்பம் சகிதம் வேதனையில் அங்கலாய்ப்பதை இவ்வாறு பல தடவைகள் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் இரண்டரை வருடங்களாகியும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதனால் இதனை எனது முகநூல் நண்பர்களின் மூலம் சம்மந்தப்பட்டவர்களுக்கு சென்றடைய செய்யமுடியும் எனும் நம்பிக்கையில் பதிவிடுகிறேன்.
இப்பதிவை அனனைவரும் சகலருக்கும் பகிர்ந்து ஒரு சிறந்த முடிவை அந்த குடும்பத்துக்கு பெற்றுக்கொடுத்து அந்த குடும்பத்தின் கவலையை துடைக்க இறைவன் துணை புரிய வேண்டும்.
காணும் போது உண்மையில் கல்மனமும் கரையும் இந்த குடும்பம் இழந்த சகோதரனை பெறுவதற்கு இலங்கயில் போகாத இடமுமில்லை சந்தித்து பேசாத அதிகாரிகளும் இல்லை அவ்வாறு போனாலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளோ எவ்விதகடமை உணர்வுமின்றி முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்லாமல் ஏதோ நொண்டிச்சாட்டுகளை கூறுபவர்களகவே உள்ளனர். 
இது தொடர்பில் விபரம் அறிந்தவர்களின் உதவியை கேட்டால் அனைவரும் பிணம் திண்னும் கழுகள் போன்று பணத்தால் வயிற்றை நிரப்புகிறார்கள் மாற்றமாக முன்னேற்றம் எதுவும் இதுவரை எட்டப்படவில்லை. இறுதியாக இலங்கை வெளி நாட்டு திணைக்களத்தில் 2015/ 04/ 10 மீண்டும் அந்த நபர் பற்றி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவரை பற்றி தகவல் தெரிந்தோர் கீழ் கண்ட முகவரிக்கு இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும் (0770700435) தயார்.
ஆமீன்…….