20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வீரகெட்டியவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
வீரகெட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் முன்பகுதியை 1305 இலட்சம் ரூபா செலவில் மறுசீரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒன்றிணைந்து தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்ற, மிகவும் தெளிவான நிலைக்கு வந்துள்ளனர் எனவும், எனினும் புதிய தேர்தல் முறைமை எதிர்வரும் தேர்தலில் இடம்பெறாது அதற்கு பின்னரே முன்னெடுக்கப்படும் எனவும் இதன்போது சஜித் பிரேமதாச கருத்துத் தெரிவித்தார்.