வௌிநாடுளில் உள்ள இலங்கை தூதுவர்களை தௌிவுபடுத்தும் நிகழ்வொன்று கொழும்பில் இன்று (22) முன்னெடுக்கப்பட்டது.
வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
டயஸ் போரா என்பதற்கு பிழையான அர்த்தம் வழங்கப்படுவதாக இதன்போது வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்..
புலம்பெயர் அமைப்புக்களின் மாநாடு வேறு எவரதும் ஆலோசனை அல்ல. அந்த கருத்தை நானே முன்வைத்தேன். உலகின் பல நாடுகளில் உயர் பதவிகளை வகிக்கும் பலர் உள்ளனர். டயஸ்போரா என்பது அதில் சிங்களவர்கள் இருக்கலாம், தமிழ் மக்கள் இருக்கலாம், முஸ்லீம் மக்கள் இருக்கலாம். பறங்கியர் இருக்கலாம். தமது தாய் நாட்டில் இருந்து வௌியேறிச் சென்று வௌிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்களால் அந்த நாடுகளில் உயர் பதவிகளை வகிக்க முடிந்துள்ளது. குறிப்பாக நாஸா போன்ற நிறுவனங்களில் இலங்கையைச் சேர்ந்த பத்துப் பேர் உள்ளதாக எனக்கு அறியக்கிடைத்துள்ளது. எனவே அவர்கள் அனைவரையும் எமது புதிய பயணத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும் .