இள­வ­ரசர் ஹரி பிரித்­தா­னிய இரா­ணு­வத்தில் இருந்து 10 வருடங்களின் பின்னர் விடை­பெற்றார் !

 இள­வ­ரசர் ஹரி பிரித்­தா­னிய இரா­ணு­வத்தில் இருந்து நேற்­று­முன்­தினம் விடை­பெற்றார் என்று அரச குடும்­பத்தின் அதி­கா­ர­பூர்வ வலை­த­ளத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 10 ஆண்­டு­க­ளாக பிரித்­தா­னிய இரா­ணு­வத்தில் பணி­யாற்­றி­வந்த இள­வ­ரசர் ஹரி நேற்­று­முன்­தினம் விடை­பெற்றார்.

இதை­ய­டுத்து, அவர் விலங்­கு­களை பாது­காப்­பது தொடர்­பான திட்­டங்­க­ளுக்­காக ஆபி­ரிக்கா செல்­ல­வுள்ளார். அங்கு அவர் மூன்று மாதங்கள் தங்­கி­யி­ருப்பார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக பிரித்­தா­னிய அரச குடும்­பத்தின் அதி­கா­ரப்­பூர்வ டுவிட்டர் வலை­த­ள­மான கென்­சிங்க்டன் அரண்­மனை செய்தி வெளி­யிட்­டுள்­ளது. ஹரி முழு­மை­யாக தனது பணி­களை செய்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது.

மேலும், அவ­ரது தந்தை சார்ள்ஸ் மற்றும் அவ­ரது அண்ணன் வில்­லி­யம்ஸை போல் அவரும் வன­வி­லங்கு பாது­காப்­புக்கு முக்­கி­யத்­துவம் தரு­வ­தா­கவும், எதிர்­வரும் 3 மாதங்கள் அவர் ஆபிரிக்காவில் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான திட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.